உயர்தரப் பரீட்சையில் குறைந்த எண்ணிக்கையிலான மோசடிகள்

தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட வினாத்தாள் விநியோகம் மற்றும் நேரக் கணிப்பீடு என்பன புதிய தொழில்நுட்ப முறையின் கீழ் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு … Read more

அதிகரிக்கப்பட்டது பணத்தொகை! சரியான தகவலுக்கு 25 இலட்சம் ரூபா: பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு

ரம்புக்கன, கொட்டவெஹெர ரஜமகா விகாரையில் கலைப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நம்பகத்தன்மையான தகவலை வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என தற்போது பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 859 1772, 07 18591924, 011 2422176 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு தகவலை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதலாம் இணைப்பு வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் … Read more

விரிவான தேசிய கடல்சார் இடர் தயார்படுத்தல் பொறிமுறையை உருவாக்குவதில் இலங்கைக்கு அவுஸ்திரேலியா உதவி

சிறந்த சர்வதேச நடைமுறைகள், இலக்கை நோக்கி பணியாற்றுவதற்காக கணினி பொறியியல் மாதிரியின் பயன்பாடு, முழுமையான மற்றும் நவீன கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவுவதற்கான இலங்கையின் குறிக்கோள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து, வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு அண்மையில் பல்வேறு பங்குதாரர்கள் கலந்து கொண்ட சந்திப்பொன்றை நடாத்தியது. பாரிய அளவிலான அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், இரசாயணங்கள் மற்றும் … Read more

ராஜபக்ச தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த புதிய கருத்து கணிப்பு! ஆட்சியாளர்களுக்கு பேரடி தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் வழிநடத்தி வரும் தற்போதைய அரசாங்கம் தொடர்பான புதிய கருத்து கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகளுக்கு அமைய பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொள்கைகள் தொடர்பான கற்கை கேந்திர நிலையம் இந்த கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. சில துறைகள் உள்ளடங்கும் வகையில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் என்ன?.தற்போதைய அரசாங்கத்தின் … Read more

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி டோஸ்கள் பெற வேண்டும் எனின், அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  இதன்படி, இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அதற்கான வசதிகளை செய்து கொடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், … Read more

கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? நீதி அமைச்சரிடன் கேள்வி எழுப்பும் மக்கள்

உயிரோடில்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது என்று நீதி அமைச்சர் கேட்கின்றார் எனில் கையளிக்கப்பட்ட மது உறவுகளிற்கு என்ன நடந்தது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் ரத்தீஸ்வரன் கவிதா கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் எதரிவரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள போராட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது குடும்பங்களின் சங்க … Read more

“Galle Techno Park” (தொழில்நுட்பப் பூங்கா) நிர்மாணப் பணிகள்… ஜனாதிபதி பார்வையிட்டார்…

காலி, வலஹன்தூவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் “Galle Techno Park” (தொழில்நுட்பப் பூங்கா), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் தொழில்நுட்பப் புத்தாக்கல் கலாசாரத்தைக் (Cultural Technological Innovation) கட்டியெழுப்பும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதிலும் ஐந்து “தொழில்நுட்பப் பூங்கா”க்களை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையைத் தொழில்நுட்பப் புத்தாக்க கேந்திர நிலையமாக மாற்றியமைத்தல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், மேம்பட்ட தொழில்நுட்பத்துடனான புதிய நிறுவனங்களை ஊக்குவித்தல், ஏற்றுமதியை இலக்காகக் … Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் வெளியிட்டுள்ள காணொளி

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கைக்கான தனது விஜயம் தொடர்பிலும், தன்னைப்பற்றியும் பகிர்ந்துள்ளார்.  குறித்த காணொளியில் அமெரிக்கத் தூதுவர் கூறும் விடயங்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வணக்கம் மற்றும் ரொம்ப நன்றி உள்ளிட்ட தமிழ் வார்த்தைகளையும் உச்சரித்துள்ளார். 🇺🇸 & 🇱🇰 have a lot in common – from our #democratic values to our shared commitment … Read more

பிராந்திய விடயங்கள் தொடர்பாக இலங்கை அவுஸ்திரேலிய ஆராய்வு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் உலக விவகாரப் பிரிவின் உதவி செயலாளர் டொம் மெனடு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள் பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று (பெப்ரவரி 17) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலி தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக் குழுவினரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திர … Read more

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் சிறந்த சந்தர்ப்பம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது.  தற்போது அவுன்ஸூக்கு, 1,888 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. மேலும், இலங்கையின் இன்றைய தங்க நிலவரத்தின்படி தங்க விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைவடைந்துள்ளது. அதன்படி, ஒரு பவ்ன் 24 கரட் தங்கத்தின் விலை – 108,050 LKR ஒரு பவ்ன் 22 கரட் தங்கத்தின் விலை –  99,100 LKR     ஆக இலங்கையில் இன்று பதிவாகியுள்ளது.  Source link