பெப்ரவரி 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்  தம்மிக்க தஸநாயக தெரிவித்தார். இதற்கமைய பெப்ரவரி 22ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இறப்பர் மீள்நடுகை … Read more

கனடாவில் தஞ்சம் அடைய தனது வீட்டில் தாக்குதல் நடத்தினாரா சமுதித்த?

இலங்கையின் பிரபல ஊடகவியலாளரான சாமுதித்த சமரவிக்ரமவின் வீடு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட பின்னணியில் குறித்து பல்வேறு கருத்து வெளிவருகின்றன. கனடாவில் அரசியல் தஞ்சம் பெறுவதாக தனது வீட்டை சமுத்தித்த தாக்கியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சமுத்தித்த, தனக்கு சில காலங்களுக்கு முன்னரே அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான நுழைவு விசா வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் தனது குடும்பத்துடன் கனடா செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் … Read more

பிராந்திய விடயங்கள் தொடர்பாக பிராந்திய விடயங்கள் தொடர்பாக ஆராய்வு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் உலக விவகாரப் பிரிவின் உதவி செயலாளர் டொம் மெனடு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள் பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று (பெப்ரவரி 17) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலி தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக் குழுவினரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திர … Read more

இத்தாலியில் இலங்கை பெண் கொடூரமாக கொலை! – மகன் கைது

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனது வீட்டில் இலங்கைப் பெண்ணை கொலை செய்ததாகக் கூறப்படும் 25 வயது இளைஞனை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாத்தாண்டிய முதுகடுவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ரத்நாயக்க வயது 54 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை … Read more

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு நேற்று (17) பிற்பகல் தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போதே கௌரவ தபிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் … Read more

இலங்கையில் கட்டாயமாகும் தடுப்பூசி அட்டை! – வெளியாகியுள்ள அறிவிப்பு

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை அடையாளம் காணும் செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். “பொது இடங்களுக்குள் வருபவர்களுக்கு கட்டாயம் முழு தடுப்பூசி போடுவது ஏப்ரல் 30ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு தடுப்பூசி அட்டை தேவைப்படும்.” “இந்த நாட்களில் நாங்கள் மற்ற விஷயங்களில் வேலை செய்கிறோம். பொதுமக்களுக்கு எளிதான செயலி … Read more

கொவிட் நோயாளர்கள் வைத்திய சிபாரிசு இன்றி மீள்சக்திக்கான மருந்தை பயன்படுத்த வேண்டாம்

கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் மருந்து வகைகளை எடுக்கும் போது அவர்களுக்குள்ள  நோய் அறிகுறிகளுக்கு  மாத்திரம் மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார பிரிவு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. வைத்திய சிபாரிசு இன்றி மீள்சக்திக்கான எந்த மருந்து வகைகளையும் எடுக்க வேண்டாம் என்று இயன் மருத்துவர் (physiotherapist) விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன ,சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று மாலை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வு! – வெளியாகியுள்ள விலை நிலவரம்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் நாள் குறித்து மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். பயன்படுத்திய வாகனங்களின் அதிக விலையே இதற்குக் காரணம். கோவிட் பரவல் தொடங்கியதில் இருந்து பல சந்தர்ப்பங்களில் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைத்த சுசுகி ஆல்டோ காரின் விலை தற்போது 4 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட சுசுகி வேகன் ஆர் இன் விலை … Read more

வெளிநாடுகளில் பணியாற்றும் 950 இலங்கையர்கள் டிஜிட்டல் பதிவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்கள் 950 பேர் தேசிய விஞ்ஞான அமைப்பின் உலகளாவிய டிஜிட்டல் மேடையில் பதிவுகளை மேற்கொண்டிருப்பதாக அதன் சர்வதேச தொடர்புகள் குறித்த பிரிவின் தலைமை அதிகாரி ஜெ.பீ சாந்தசிரி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

பலரின் முன்னிலையில் மனைவியை தாக்கிய இராணுவ அதிகாரி

பனாகொடை இரைாணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ மேஜர் ஒருவர் பௌர்ணமி தினமான நேற்று பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபலமான விகாரை ஒன்றில் வைத்து தனது மனைவியை தாக்கியுள்ளார். சிறுவர்கள் உட்பட விகாரைக்கு வந்திருந்த பெருந்திரளான பக்தர்களுக்கு எதிரில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. மேஜரின் தாக்குதலுக்கு உள்ளான மனைவி, பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தேக நபரான இராணுவ அதிகாரியை பாணந்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். இருவருக்கும் இடையில் இருந்து வந்த குடும்ப சண்டை … Read more