தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் அரியவகை விலங்கினம் ஈன்ற கன்று!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள அருகி வரும் விலங்கினமான அரேபிய ஒரிக்ஸ் (Arabian oryx), கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த அரேபிய ஒரிக்ஸ் கன்று ஆரோக்கியத்துடன் இருப்பதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த புதிய குட்டி தனது தாயுடன் பொது மக்கள் பார்வைக்காக விலங்குகள் சரணாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. பாலைவன பாலூட்டிகளான அரேபிய ஒரிக்ஸ்கள், அரேபிய பாலைவனத்திற்கு உரித்தானவையாகும். அங்கு சுமார் 1,000 அரேபிய ஒரிக்ஸ் மட்டுமே வசித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் … Read more

தேசிய கைத்தொழில் வல்லுநர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து விருது…

“நாட்டுக்கு புத்துயிர் அளிக்கும் தொழிற்றுறை மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளில், கைத்தொழில் துறைசார் வல்லுநர்களைக் கௌரவிக்கும் தேசிய கைத்தொழில் சிறப்பு விருது விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில், நேற்று (15) பிற்பகல், பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது. சிறப்புமிக்க சிறு, நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழில் உற்பத்திகள் மற்றும் சிறப்புமிக்க இயந்திர உற்பத்திகள் போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த விருது விழாவின் போது ஜனாதிபதி அவர்களினால் பிளாட்டினம் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். பாரிய, … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப் போகும் கவர்ச்சிகரமான மாற்றம்

இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று காலை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நெரிசலைக் குறைக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வரும்போது … Read more

நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை வரவேற்கின்றோம் – அமைச்சர் உதய கம்மன்பில

நெருக்கடியான சூழ்நிலையின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை வரவேற்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய எரிபொருள் நிறுவனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல், கொழும்பை நேற்று (15) வந்தடைந்தது. கப்பலை வரவேற்க எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சென்றிருந்த போதே அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் … Read more

சொத்துக்காக தகப்பனை கொலை செய்த இலங்கை கோடீஸ்வரர்?

1830 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த போரா சமூகத்தை சேர்ந்த பெரும்திரளான வியாபாரிகள் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் சிறு வியாபாரங்களாக ஆரம்பித்து இன்றைய காலப்பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்காளர்களாக மாறியுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் திகதி போரா சமூகத்தின் தலைவர் Dr. Syedna Mufaddal Saifuddin Saheb அவர்களை ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் சந்தித்தபோது கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. Leader of Bohra community meets President… இவ்வாறிருக்க … Read more

வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 பெப்ரவரி 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டபாயவிடம் பொய்யான தகவல்களை வழங்கிய உயர் அதிகாரி

புகையிரத பொது முகாமையாளர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40 ரயில் பெட்டிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தமை உண்மைக்கு புறம்பானது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே பொது மேலாளரின் தகவலுக்கமைய, 40 பெட்டிகள் அல்ல 31 பெட்டிகள் மாத்திரமே செயற்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக நேரங்களில் பெட்டிகளை தொழில்நுட்ப ரீதியாக இயக்க முடியாது, … Read more

ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று?

ஓமிக்ரோன் வைரசு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற அனைத்து கொவிட் தொற்றாளர்களும் ஒமிக்ரோன் வைரஸ் வகை திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் தொற்று குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய் என்பது தவறான கருத்தாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான நோய் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். … Read more

இலங்கையில் கோவிட்டுக்கு மருந்து கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தியவரின் வீட்டில் நடந்த சோகம்

கோவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 58 வயது எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த … Read more

கடற்பரப்புகளில் சாதாரண முதல் மிதமான அலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை.தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என … Read more