இலங்கையில் கோவிட்டுக்கு மருந்து கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தியவரின் வீட்டில் நடந்த சோகம்

கோவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 58 வயது எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த … Read more

கடற்பரப்புகளில் சாதாரண முதல் மிதமான அலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை.தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என … Read more

மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிகளுக்கு அதிர்ச்சி – கழிப்பறைக்குள் சிக்கிய ரகசிய கமரா

கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருப்பதை, தனது மகள் உட்பட மாணவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். இவ்வாறான மோசமான செயற்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளதாக மாணவிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் … Read more

தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்காக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு, மின்சார சபைக்கு வழிகாட்டல்

மின்துண்டிப்பை மேற்கொள்ளாது மின்சார சவால்களை எதிர்கொள்வது பற்றி பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில், இது தொடர்பான புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, பெப்ரவரி, மார்ச், ஏப்பரல் ஆகிய எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய … Read more

இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம்! – அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம், மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப் புலனாய்வுத்துறையினரை பயன்படுத்தி அரசாங்கம்,  சமூக ஆர்வலர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் கருத்துக்களை நசுக்க முயல்வதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய, சட்டத்தரணி சுனில் வட்டகல, அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், விமர்சனங்கள் எழுந்துள்ளமையை அடுத்தே அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக வட்டகல குற்றம் சுமத்தினார். அடக்குமுறையை கொண்டு பேச்சுரிமை நசுக்கப்படுவது, ஜனநாயக விழுமியங்களுக்கு பாரிய … Read more

மின் துண்டிப்பு ……அறிவிப்பு

நாட்டில் இன்று முதல் தினமும் மின் துண்டிப்பு இடம்பெறும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு குறைந்த அளவு எரிபொருள் கிடைப்பதே இதற்குக் காரணம். மின் துண்டிப்பு மேற்கொள்ளும் முறை குறித்து இன்று(15) பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களில் நீர் மட்டம்  குறைந்துள்ளது. நீர்த்தேக்க பகுதிகளில் மழை பொழியாவிட்டால், அடுத்த இரு வாரங்களில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மின்சாரத் … Read more

தங்க நகைகள் அணியும் போது மிகவும் அவதானமாக இருங்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் நாட்டின் பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. அந்த வகையில், கஹதுடுவ – அம்பலாங்கொட வீதியில் பயணித்த நபரொருவரின் கழுத்தில் இருந்த நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர். இதனை அருகில் இருந்தவர் ஒருவரால் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அக்மீமன பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை அறுத்துச் சென்றுள்ளனர். இது … Read more

சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 15ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

யாழில் பரிதாபமாக பறிபோன இரு இளையவர்களின் உயிர்! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இருவர் டெங்கு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அராலி வீதி, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த வி்.அஜேய் என்ற வயது 11 எனும் சிறுவனும், 2ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கஜந்தினி யோகராசா எனும்18 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். டெங்கு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளையில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணங்களின் பின்னர் யாழ். குடாநாட்டில் டெங்குக் காய்ச்சல் பரவல் அச்சமும் வெளிவந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் … Read more