அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கௌரவ பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (10) பிற்பகல் பிரதமரின் செயலாளர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அலரி மாளிகையில் நடைபெற்ற அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கௌரவ பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக … Read more

ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில், ஒட்சிஜன் தேவைப்படும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து வீதத்தில் இருந்து 10 வீதமாக அதிகரித்துள்ளது. பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை  குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும்  வலியுறுத்தியுள்ளார்.   Source link

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம். மங்கள சமரவீர கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், லண்டனில் உள்ள புனித மார்ட்டின் உயர்கல்வி நிறுவனத்தில் தனது முதல் பட்டத்தையும் முடித்த பின்னர் 1983 இல் இலங்கை திரும்பினார். மங்கள சமரவீர 1988 இல் மாத்தறை தொகுதிக்கு … Read more

காதலர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கை

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றாடல் அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் அதேவேளையில், பெப்ரவரி 14 ஆம் திகதி ‘காதலுக்கு ஒரு மரம்’ என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது. குறித்த மரம் நடும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுக்க கிறீன் யுவர்சிட்டி, இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து … Read more

மின்சாரம் துண்டிக்கப்படுமா? பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ள உறுதிமொழி

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை (14) வரை மின்வெட்டை  நடைமுறைப்படுத்த  வேண்டிய தேவை ஏற்படமாட்டாது என அவர்  உறுதியளித்துள்ளார்.  Source link

கிரான் பாலத்தில் இருந்து குடும்பி மலை வரையான பிரதான வீதிக்கு 1,454 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் காப்பட் இடும் பணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சுமார் 40 வருடகாலத்திற்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட கிரான் புலிபாய்ந்த கல் வீதி தொடக்கம் குடும்பிமலை வரையான சுமார் 38 கிலோமீற்றர் வரையான வீதிக்கான காபட் இடும் வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று (10) காலை கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை … Read more

கோட்டாபயவை கட்டுப்படுத்தும் பலமான பெண் – ஹோட்டலுக்கு அழைத்து வந்தவரால் சர்ச்சை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்த பெண்ணாக கருதப்படும் ஞானக்காவை கொழும்பு ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து வந்துள்ளமை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பிரபுக்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரபல சோதிடர் என அழைக்கப்படும் அநுராதபுரம் ஞானக்காவின் நகங்களை அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஞானக்கா சென்ற அழகு நிலையம் ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய பிரபலத்தினால், ஞானக்காக அங்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் … Read more

பல இடங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 பெப்ரவரி 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் … Read more

மஹிந்தவின் கடும் கோபத்திற்குள்ளான தென்னிலங்கை அமைச்சர் – பொதுவெளியில் நடந்ததென்ன?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது வெளியில் கடுமையாக செயற்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நடந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அமைச்சர் ரோஹித அபேவர்தன கருத்து வெளியிட்டுள்ளார். அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது பிரதமர் மஹிந்த கோபமாக, ரோஹிதவின் கையை தட்டி விட்டார். மஹிந்தவின் கையை அமைச்சர் ரோஹித அபேவர்தண பிடிக்க சென்ற போது அதனை பிரதமர் கோபத்துடன் தட்டிவிடும் காணொளி … Read more