இந்தியாவில் புதிதாக 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 4ஆயிரத்து 184 பேர் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் இந்திய மாநிலமான கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 இலட்சத்து 15ஆயிரம்து 459 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4Mapuj;J 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளdu;. இதில் … Read more

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 … Read more

இலங்கையில் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் பாரிய நெருக்கடி

பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 1,600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இலங்கையில் தற்போது 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவான தொகையே இருப்பதாக மக்களுக்கான அறிவுசார் மன்றம் தெரிவித்துள்ளது.   வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் பாரிய நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.   கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் எஞ்சிய கையிருப்பு யுவானில் இருப்பதாகவும், யுவான் நாணயத்தில் ஜேர்மனி மற்றும் இந்தியாவிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய … Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸூடன் சந்திப்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 09ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவர் சுங்கை அன்புடன் வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கையிலான அவரது பதவிக் காலத்தின் போது தூதுவருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்காவை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கருதுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் … Read more

கச்சத்தீவு திருவிழா நாளை ஆரம்பம்

கச்சத்தீவு திருவிழா நாளை (11) ஆரம்பம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்யவுள்ளனர். இந்திய-இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம். இந்திய-இலங்கை பக்தர்களிடையே இணக்கமான உறவை மேம்படுத்த பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் இந்த திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக … Read more

இலங்கைக்கு கிடைக்கவுள்ள கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்

 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.. 600 இற்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலில் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி யோசனை முன்வைத்திருந்தது. எனினும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மாத்திரமே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இறக்குமதி கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்வைத்த பொருட்களின் பட்டியலிற்கமைய, ஒவ்வொரு மாதமும் … Read more

பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பிணை

இந்தியாவின் முன்னள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பிணையில் செல்ல இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதித்துள்ளது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த வந்த நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்குவதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தது. இதற்கு இந்திய  அரசு வழக்கறிஞர் சிபிஐ … Read more

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 'மித்துறு பியஸ' மூலம் ஆலோசனை சேவை   

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட  ‘மித்துறு பியஸ’ ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இலவசமாக சேவை வழங்கப்படும். சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதுடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும். சில நிலையங்களில் வார … Read more

யாழ்ப்பாண மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பும் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை 22 கரட் … Read more

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் அனுமதி தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று (08) அனுமதி வழங்கப்பட்டது.   இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் … Read more