கௌரவ பிரதமரின் தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும் தேசிய பாடசாலை அமைப்பில் இணைப்பு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும் தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (08) இடம்பெற்றது. நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக கல்வி அமைச்சின் அனுசரணையில் ‘ஆயிரம் தேசிய பாடசாலைகள், வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த பத்து பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அறிவிப்பதற்கான பெயர்ப் பலகைகள் கௌரவ பிரதமரினால் அலரி மாளிகையிலிருந்து … Read more