அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – செய்திப் பார்வை

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியை 230 ரூபா வரை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களின்போது ஒரு அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 230 ரூபாவாக அமையும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,     Source link

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: வாழ்த்துச் செய்தி – 2022 மார்ச் 08 ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். … Read more

அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன்! – ஜனாதிபதிக்கு அமைச்சர் எழுதிய கடிதம்

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் … Read more

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை கொள்முதல்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளினை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் இன்று (07) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் தங்காலை பழைய சந்தை வளாகத்தில் ஆரம்பமானது. கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு கிலோ கிராம் மஞ்சளினை ரூ.165 … Read more

பொலன்னறுவை இராச்சியத்தின் மிகவும் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு! (Photo)

பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாகக் கருதக்கூடிய சிவலிங்கத் தளம் அல்லது கல்லை தொல்பொருள் திணைக்களம் மற்றும் இலங்கை தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இன்று (07) கண்டுபிடித்துள்ளனர். பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் படி இந்த சிவலிங்கத் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலகட்டம், அதாவது கி.பி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் கட்டமைப்புகள் தொழிநுட்பம் கொண்டவையாகக் கருத முடியும் என பொலன்னறுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் பி.எச்.நளின் … Read more

இந்நாட்டின் மிகப்பெரிய சீமெந்துத் தொழிற்சாலையின் உற்பத்தி ஆரம்பம்…மாகம்புரவுக்கு புதிய உருக்குத் தொழிற்சாலை …

மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரைவெட்) லிமிடெட்” நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் அவர்கள் நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய உருக்குத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர். 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் புதிய உருக்கு ஆலைக்கான … Read more

தீர்மானம் 46/1 இல் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுங்கள்! இலங்கைக்கு பிரித்தானியா அழைப்பு

பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லாமை மற்றும் பல மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதற்கு பிரித்தானியா கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தீர்மானம் 46/1 இல் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய தூதுவர் ரீட்டா பிரெஞ்ச் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட அறிக்கை தொடர்பான ஊடாடும் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், … Read more

சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா! – அமைச்சர் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நடவடிக்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிப்பது மட்டுமன்றி, இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். On the request of HE … Read more

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியர்களுக்கும் கௌரவ பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியர்களுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) பிற்பகல் தங்காலை தனியார் ஹோட்டலொன்றில் இடம்பெற்றது. இதன்போது ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து வைத்தியர்கள் கௌரவ பிரதமருக்கு தெளிவுபடுத்தினர. தங்காலை வைத்தியசாலையை மத்திய அரசுக்கு கையகப்படுத்தும் நடவடிக்கையை முறையான மற்றும் விரைவான வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது கௌரவ பிரதமர் கவனம் செலுத்தினார். குறித்த சந்திப்பில் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ, மாவட்ட சுகாதார சேவைகள் … Read more