ஷேன் வோர்ன் தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை! தாய்லாந்து பொலிஸார் தகவல் (PHOTOS)

புகழ்பெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் தங்கியிருந்த சொகுசு விடுதி அறையின் தரையிலும், குளியல் துண்டுகளிலும் “இரத்தக் கறைகள்” காணப்பட்டுள்ளதை தாய்லாந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ஷேன் வோர்ன்  தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் தாய்லாந்து ஊடகத்தை மேற்கோள்காட்டி இன்று (6) தாய்லாந்து பொலிஸார் ஷேன் வோர்ன் தங்கியிருந்த அறையில் தரையில் மற்றும் குளியல் துண்டுகளில் இரத்தம் இருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர். “அறையில் அதிக … Read more

தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையில் எரிபொருள்

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட 45 டிப்போக்கள் இதற்காகச் செயற்படுகின்றன. எதிர்வரும் தினங்களில் மேலும் சில டிப்போக்கள் இந்த முறையின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்று இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் வினிஸ்டா விமான நிலையத்தை அழித்து நொருக்கிய ரஷ்யா படைகள்

உக்ரைன் – ரஷ்யா போர் இன்று 11 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனின் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி வடக்கு பகுதியில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷ்ய படைகள் அணிவகுத்து வரும் … Read more

உடன்பிறப்புக்களை சமாதானப்படுத்துவதில் தோற்றுப்போன மஹிந்த ராஜபக்ச!

 சகோதரர்களான கோட்டாபய மற்றும் பசில் ஆகியோரின் முடிவை மாற்றியமைக்க பிரதமர் ராஜபக்ச மேற்கொண்ட முயற்சி பயன் தரவில்லை. பல மாதங்களாக முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையிலான அதிருப்திக் குழுவின் முக்கிய இலக்காக இருந்த அவரது இளைய சகோதரரும் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் முறைப்பாட்டையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவர்கள் இருவரையும் அமைச்சு பதவியில் இருந்து வெளியேற்றினார். இந்த முடிவில் கோட்டாபயவும் பசில் ராஜபக்சவும் உறுதியாக இருந்தனர். இதன்போது ராஜபக்ச குடும்பத்தில் … Read more

தீகவாப்பி தூபியில் புனித சின்னங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன

தீகவாப்பி மஹா தூபியின் அரைக்கோளக் குவிமாடத்தில் புனித சின்னங்கள் வைக்கும் நிகழ்வு அம்பாறை தீகவாப்பிய ரஜமஹா விஹாரை வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ‘தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இன்று (மார்ச், 06) இடம்பெற்றது. ஶ்ரீ சம்போதி விஹாரையின் முன்னாள் விஹாரதிபதி காலஞ்சென்ற வண. தரணாகம குசலதம்ம தேரரின் 4வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூபியின் ‘சூடா மாணிக்கம்’ ஏந்திய வாகண பவனி கொழும்பு ஸ்ரீ … Read more

விபத்தில் தந்தையும் மகனும் பரிதாப மரணம்: பேருந்து மீது பொதுமக்கள் தாக்குதல்(Video)

வவுனியா – குருக்கள் புதுக்குளம் பகுதியில் பேருந்து மற்றும்  மோட்டார் சைக்கிள் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். குருக்கள் புதுக்குளம் பகுதியில் மன்னார் பறயநாலங்குளம் பிரதான வீதியில் இன்று (06) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்து கொண்டிருந்த தனியார் பேருந்து குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு ஏறிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் … Read more

மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி

நியுசிலாந்தில் இடம்பெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இன்று(06)  இடம்பெற்ற நான்காவது போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை வெற்றி கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.  அதன்படி இந்தப் போட்டியில் இந்திய … Read more

ரஷ்யாவின் 80 விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! தடுமாறும் ரஷ்யா இராணுவம் (காணொளி)

உக்ரைனில் போர் ஆரம்பித்தது முதல் ரஷ்யா 88 விமானங்கள் மற்றும் உலங்கு வானுார்திகளை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்போது பல ரஷ்ய விமானிகள் பிடிபட்டுள்ளதாகவும் உக்ரைனின் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. உக்ரைனின் ஆயுதப் படைகள் தென்கிழக்கில் உள்ள முக்கிய துறைமுக நகரமான மரியுபோலைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. இந்தநிலையில் கணிசமான அளவு” ரஷ்ய ஆயுதங்கள் மைகோலேவ் பகுதியில் கைப்பற்றப்பட்டன. தற்போதைய நிலையில் உக்ரைனின் எதிர்ப்பின் வலிமையால் ரஷ்ய வீரர்கள் மனச்சோர்வடைந்துள்ளனர் என்றும் … Read more

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி:இந்திய அணி வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும்இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ,இந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம்; நாள்இன்றாகும். முதலாவது இனிங்சிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களைப்பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்று (06) சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் … Read more