அமைச்சர் ஒருவரின் செயற்பாடு காரணமாக உச்சகட்ட கடுப்பில் கோட்டாபய

அமைச்சர தினேஷ் குணவர்த்தனவின் செயற்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் கோபத்திற்கு உள்ளானதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்ற வேளையில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காமினி லொக்குகே மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சென்றுள்ளார். அவசர கூட்டம் ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ள நிலையில் அவர் திரும்பி வரும் … Read more

இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் தற்போது மொஹாலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி சற்று முன்னர் வரை 2 விக்கட் இழப்பிற்கு விக்கட் இழப்பின்றி, 139 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது.. இதனைத்தொடர்ந்து இரண்டு போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. … Read more

நாட்டில் இன்று இடம்பெறும் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டில் இன்றையதினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு நடைமுறையிலிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி நாடுமுழுவதும் ஏற்படும் மின்தடை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்கள் கருத்தறிதல் விசாரணையில் மின்சார சபையின் 15 சாட்சிகள் … Read more

அடகு உட்பட பல வட்டி வீதங்கள் அதிகரிப்பு! இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. அந்த வகையில், நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. துணை நில் கடன் வசதி வீதமானது 7.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதமானது 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (03ஆம் திகதி) பிற்பகல்11.30 மணிக்கு வட அகலாங்கு 7.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.10 E இற்கும் அருகில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக220 கிலோ … Read more

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி! நிதி அமைச்சின் புதிய திட்டம்

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திர முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரையறைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்துவதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தின் பிரகாரம் இந்த அனுமதிப்பத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்வது வரையறை செய்யப்பட உள்ளது. எனினும், இந்த அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனை தடை செய்யப் போவதில்லை எனவும், இறக்குமதியை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கத் தகவல்கள் … Read more

இந்தியாவில்பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பிற்கான புலமைப் பரிசில்கள்

இந்தியாவில்பட்டப்படிப்புமற்றும்பட்டப்பின்படிப்பிற்கானபுலமைப்பரிசில்கள் கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சிலின் (ICCR) 2022-2023 கல்வி அமர்வுகளுக்கான பின்வரும் புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களை கோரியுள்ளது:  நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/துணை மருத்துவம், ஆடை வடிவமைப்பு & சட்டத்துறை கற்கை நெறிகள் தவிர்ந்தவை) அனைத்து பட்டப்படிப்பு (Undergraduate) கற்கைநெறிகளை இந்தத் திட்டம் உள்ளடக்குகின்றது. மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், பொருளியல், … Read more

பதவி விலக ஆயத்தமாகும் மற்றுமொரு அமைச்சர்?

வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க பதவி விலக ஆயத்தமாகி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் சீ.பி. ரட்நாயக்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் சீ.பி. தனது அமைச்சின் பொருட்களைக் கூட எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் தமக்கு வழங்கப்பட்ட அமைச்சின் ஊடாக எதனையும் செய்ய முடியாதிருந்த அமைச்சர், புதிய அமைச்சரவை மாற்றத்தில் வேலை செய்யக்கூடிய அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் என … Read more

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தொழில்துறை பங்காண்மைக்குள் நுழைவு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெப்ரவரி 23ம் திகதி ரத்மலானையில் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டன. இரு தரப்பினருக்கும் இடையிலான எதிர்கால கட்டமைப்பு நடவடிக்கை குறித்த இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் நிஷாந்த ரணதுங்க … Read more