வீரவங்ச மற்றும் கம்மன்பிலவின் அமைச்சு பதவிகள் பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த கோட்டாபய

அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாரச்சி மின்சக்தி அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேவேளை பவித்ரா வன்னியாராச்சியின்  போக்குவரத்து அமைச்சு பதவி ராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகமவுக்கு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது. அமைச்சர்கள் பதவியேற்பதற்கான … Read more

வீரவங்ச மற்றும் கம்மன்பிலவின் அமைச்சு பதவிகள் பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த கோட்டாபய

அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாரச்சி மின்சக்தி அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேவேளை பவித்ரா வன்னியாராச்சியின்  போக்குவரத்து அமைச்சு பதவி ராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகமவுக்கு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது. அமைச்சர்கள் பதவியேற்பதற்கான … Read more

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடற் படைக்கு சொந்தமான இரண்டு போர் கப்பல்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடற் படையின் ‘யுரகா’ மற்றும் ‘ஹிராடோ’ ஆகிய கப்பல்களே இவ்வாறு வருகை தந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்து ஜப்பானிய கடற்படை கப்பல்களுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது. கொமாண்டர் கோண்டோ கோஜியால் கட்டளையிடப்படும் 141 மீ நீளமுள்ள ‘யுரகா’ கப்பலில் 130 கடற்படை வீரர்கள் பணியாற்றுவதாகவும், … Read more

உண்மையில் வேதனையாக இருந்தது! – பதவி நீக்கப்பட்ட பின்னர் கம்மன்பில தெரிவிப்பு

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்றிரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்து தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அந்தந்த அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், இன்று (03) மாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இருவரையும் அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளதாக … Read more

அமைச்சர் பதவிகளில் திருத்தம்…  

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, பல அமைச்சுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சராக காமினி லொகுகே அவர்களும், மின்சக்தி அமைச்சராகப் பவித்ராதேவி வன்னியாரச்சி அவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 03.03.2022  

தீவிர நிலையை அடையும் யுத்தம்! ரஷ்யாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள செய்தி

உக்ரைனுக்கு எதிரான “ரத்தக்களறியை” உடனே நிறுத்த வேண்டும் எனவும், அங்கிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையில், படையெடுப்பு குறித்த தகவல்களை சுயாதீன ஊடகங்கள் ஒளிபரப்பும் திறனை தடுப்பதன் மூலம், “ஊடக சுதந்திரம் மற்றும் உண்மையின் மீது முழு தாக்குதலை” ரஷ்யா தொடங்கியிருப்பதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மில்லியன் கணக்கான ரஷ்யர்கள் சுதந்திரமான … Read more

கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க பதவிப்பிரமாணம்…

கைத்தொழில் அமைச்சராகப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில், இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும், இதன்போது இணைந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 03.03.2022  

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் ஒலித்த ஜனாதிபதியின் குறியிசை பாடல்! (Video)

 இலங்கையில் தற்போது பிரதான பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் இரவு பகலாக நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர். இந்தநிலையில்,எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஜனாதிபதியின் ”வெட கரண அபே விருவா” அதாவது ”வேலை செய்யும் எம் வீரர்” என்ற குறியிசை பாடலை பாடும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதே போல் குறித்த குறியிசை பாடலை வைத்து எரிபொருள் நிலையங்களின் தற்போதைய நிலைமையை … Read more

ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. ஹஷேம் அஷ்ஜசாதே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 03) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் மேலும் இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஈரானிய தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் … Read more

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை இந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாகன இறக்குமதி நடைபெறாது என நாட்டின் முன்னணி வாகன இறக்குமதியாளர்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற 600 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது என்பதனை தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர்கள் … Read more