இலங்கை பத்திரிகை பேரவையின் ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு

இலங்கை பத்திரிகை பேரவை வெளியிட்டுள்ள ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு நேற்று இடம்பெற்றது. வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது. “சமூக ஊடகங்களின் உயர்வு”என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாசவின் நினைவாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 71 இலட்சம் ஆகும். இதேபோன்று உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4.8 பில்லியன் … Read more

சற்றுமுன்னர் வெளியான சாதாரண தர பரீட்சையின் மற்றுமொரு பாட பெறுபேறு

2020 (2021) ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான பெறுபேறுகளே தற்போது வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பரீட்சை பெறுபேறுகளை  https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.  Source link

மத்திய கலாசார நிதியத்தின் வரைவு விதிகள் கௌரவ பிரதமரிடம் கையளிப்பு

1980 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரைவு விதிகள் குழுவின் தலைவர் ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க அவர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்களினால் நேற்று (02) அலரிமாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் 2020 செப்டெம்பர் 16 ஆம் திகதி குறித்த … Read more

இலங்கையில் முழுமையாக முடங்கும் ஆபத்தில் பேருந்து போக்குவரத்து! கடுமையான எச்சரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் ஆபத்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. சிலர், தாம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக அதிலும் குறிப்பாக டீசலை பெறுவதற்காக ஒரு சில மணித்தியாலங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கும் அதேவேளை இன்னும் சில சாரதிகள், தாம் 24 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் எரிபொருள் முறையாக … Read more

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையில் கடந்த வருடம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் ஊடாக ஏற்றுமதி 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள் , தென்னை நார் உற்றபத்திகள், தென்னை மட்டைகள் உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களத்தின் நேற்றைய தின (02) அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. உலக அளவில் உள்ளூர் … Read more

கொத்துக் கொத்தாக சரணடையும் இராணுவ வீரர்கள்: திகைக்க வைக்கும் உக்ரைன் – செய்திகளின் தொகுப்பு

உக்ரைன் – ரஷ்யப் போர் 7வது நாளை எட்டியுள்ள நிலையில், மனக்குழப்பமடைந்துள்ள ரஷ்யத் துருப்புகள் உக்ரைனில் கூட்டமாகச் சரணடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் மனக்குழப்பத்திலும் சோர்வடைந்தும் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ரஷ்ய இராணுவத்தினருக்கு தாங்கள் உக்ரைனில் போருக்கு அனுப்பப்பட்டுள்ளோமா என்பதும் தெரியவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி, உக்ரைனில் புகுந்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் எரிபொருளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் … Read more

44 கோடி பேரை பாதித்த கொரோனா வைரஸ்

தற்போது உலகம் முழுவதும் 44 கோடி பேருக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 6 … Read more

அதிகரிக்கும் போர் பதற்றம்! பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு வர விரும்பினால் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான மோதலில், பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பியதுடன், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. இதனால், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகள் பெலாரஸூக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது குறித்த முழுமையான தகவல்களை அறிந்துக்கொள்ள … Read more

உக்ரைனில் இருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் – ஐ.நா

ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், உக்ரைனில் இருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக உக்ரைன் நாட்டு மக்கள் அண்டைய நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதேவேளை ,ஒரு வாரத்திற்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் 40 இலட்சம் அல்லது 40 இலட்சத்துக்கு அதிகமான … Read more

கச்சத்தீவு திருவிழாவில் 100 பக்தர்கள் மாத்திரமே பங்கேற்க அனுமதி (Photos)

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும், இந்தியாவிலிருந்து 50 பேரும் மாத்திரமே பங்கேற்க அனுமதிப்பது என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்பவர்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் தலைமையில் நடைபெற்றிருந்தது.  இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி … Read more