மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் அரசாங்கம் மன்னிப்பு

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் யூனியன் குடியரசு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளது. மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால், ஏழு இலங்கை மீனவர்களுடன் கூடிய ‘துஷன் புதா’ IMUL-A-0741NBO என்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் மியன்மார் அதிகாரிகளால் 2021 டிசம்பர் 03ஆந் திகதி கைது செய்யப்பட்டது. … Read more

செவ்வாய் கிழமையும் கொட்டிய வசூல், வலிமை சாதனை மேல் சாதனை

வலிமை படம் பல விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெருமூச்சு வந்துள்ளது. அதிலும் பிப்ரவரி மாதத்திலும் இத்தகைய வசூல் பெரிது தான். இந்நிலையில் வலிமை படம் செவ்வாய் கிழமை கூட வசூல் கொட்டியுள்ளது. தமிழகத்தில் இதுவரையே ரூ 100 கோடிகளுக்கு மேல் வலிமை வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக இவை அஜித் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் தான். நேற்று மட்டுமே தமிழகத்தின் வசூல் ரூ 4 கோடி வந்துருக்கும் என கூறப்படுகிறது. Source link

இளைஞர்களுக்கு இலவச சாரதி பயிற்சி

ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இளைஞர்களின் நலன் கருதி இலகு வாகன பயிற்சியும், சாரதி அனுமதிப்பத்திரமும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக 96 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டினை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அல்ஹாஜ் அல்ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு இளைஞருக்கு ரூபா 25,000 செலவில் மூன்று மாத கால வாகன சாரதி பயிற்சியும்இ … Read more

அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய கட்டுப்பாடு: செய்திகளின் தொகுப்பு

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் காற்றுச்சீரமைப்பி (Air Conditioner) பயன்பாட்டைத் தினசரி 2 மணித்தியாலங்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதில் நாடு எதிர்நோக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டு, காற்று சீரமைப்பியின் பயன்பாட்டினை குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இது தொடர்பில் அறிவுறுத்துமாறு பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இது … Read more

குறைந்த அழுத்தப் பிரதேசம்:கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

இலங்கையில் பட்டாசு கொளுத்தி பலத்த ஆரவாரத்துடன் டீசல் பவுசரை வரவேற்ற மக்கள்! செய்திகளின் தொகுப்பு

தங்காலை, மஹாவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு இன்று பிற்பகல் டீசலை ஏற்றிய பௌசர் வந்த போது, அங்கு காத்திருந்த வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர். பட்டாசு கொளுத்தியும், கைதட்டியும், ஆரவாரம் செய்தும் மக்கள் டீசல் பவுசரை வரவேற்றுள்ளனர். பெட்ரோல் நிலையத்தில் டீசல் பெறுவதற்காக சுமார் 12 மணி நேரம் வரிசையில் நின்றதாக சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர … Read more

நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு

பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஹெக்டயருக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடந்த பெரும்போகத்தில் 11 இலட்சம் விவசாயிகளினால் மேமற்கொள்ளப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் அறுவடை குறைந்துள்ளது. இவர்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். உயர்ந்த பட்சம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிற்கு இந்த இழப்பீட்டை வழங்கத் … Read more

ஆறு மாதங்களாக நாங்கள் சொல்வதை அரசாங்கம் கேட்கவில்லை! பகிரங்கமாக அறிவித்தார் மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தவறியுள்ளதாக அதன் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார். ஆறு மாதங்களாக பரிந்துரை செய்யப்பட்ட முன்மொழிவுகளை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் யோசனைகளை அமுல்படுத்தினால் அந்நிய செலாவணிப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் கப்பல் ஒன்றுக்கு பணம் செலுத்துவது தொடர்பிலான பிரச்சினை கிடையாது எனவும், நீண்ட காலமாக அந்நிய செலாவணிப் பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் … Read more

அரச நிறுவனங்களில் அமுலாகவுள்ள புதிய கட்டுப்பாடு

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் காற்றுச்சீரமைப்பி (Air Conditioner) பயன்பாட்டை தினசரி 2 மணித்தியாலங்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் நாடு எதிர்நோக்கும் சவால்களை கருத்தில் கொண்டு, காற்றுச்சீரமைப்பியின் பயன்பாட்டினை குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இது தொடர்பில் அறிவுறுத்துமாறு பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சின் செயலாளர் … Read more

லொத்தர் சீட்டு அச்சிடுவதில் பெரும் சிக்கல்

கொழும்பிற்கு வெளியில் மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் லொத்தர் சீட்டுகளில் கணிசமான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷான் மரம்பகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அதிகாரிகளிடம் வினவியபோது, ​​லொத்தர் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான காகிதத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள் என கிருஷான் மரம்பகே குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக லொத்தர் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கு ஏற்ப லொத்தர்களை வழங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், லொத்தர் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ள … Read more