434 வாகன விபத்துக்களில் 457 பேர் உயிரிழப்பு
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் 25 ஆம் திகதி வரையில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் 434 . இதில் 457 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் மாத்திரம் பதிவான மரண எண்ணிக்கை 44 ஆகும். இந்த வாகன விபத்துக்களுக்கு முக்கிய காரணம் கவனயீனமாகும். இதனால் சாரதிகள் வீதி ஒழுங்குமுறைகளில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.