நடிகை சமந்தா வீட்டின் சமையல் அறையை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் பாருங்க

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் யசோதா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விவாகரத்து பிறகு நடிகை சமந்தா தன்னுடைய தனி வீட்டில் தங்கி வருகிறார் . இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது தனியாக தங்கி வரும் வீட்டின் … Read more

இலங்கையை வருகைதந்துள்ள நான்காயிரம் உக்ரைன் பிரஜைகள்

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கான விஸாவை பெற்றே நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அமைச்சு கூறுகின்றது. எனினும், உக்ரைனில் தற்போது ஏற்பட்டு யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு விஸா கால எல்லையை அதிகரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஸா காலம் முடிவடைந்த பின்னர், நாடு திரும்ப விரும்பும் உக்ரைன் பிரஜைகளை, நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

உக்ரேன் – ரஷ்யா நெருக்கடி:இலங்கையின் நிலைப்பாடு

உக்ரேன் – ரஷ்யா நெருக்கடி தொடர்பில் இலங்கை நடுநிலையுடன் செயற்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ,அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போன்ற நாட்டுக்கு ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அல்லது வேறு தடைகளை விதிக்கும் ஆற்றல் இல்லை என்று குறிப்பிட்டார். உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான அவதானத்துடன் அரசாங்கம் செயல்பட்டு வருதாக அவர் … Read more

இலங்கையில் தினசரி 10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் (Video)

மழை பெய்தால் மாத்திரமே மின்வெட்டை தவிர்க்க முடியமெனவும், அவ்வாறு இல்லையெனில் மார்ச் மாதம் முதல் தினசரி 10 மணிநேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுமெனவும் இலங்கை மின்சார சபையினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நேற்று முதல் 5 மணித்தியாலங்களுக்கு மேலான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் இந்த நிலைமை மோசமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா அதிருப்தி!

 இலங்கையின் பல மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குடியியல் இடம் மற்றும் சுதந்திரமான நிறுவனங்களை உறுதிசெய்து, தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இலங்கை நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் நீடித்த நல்லிணக்கத்தை அடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அண்மைக்கால நடவடிக்கைகளை பச்லெட் அங்கீகரித்துள்ளார். எனினும் தேவையான சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறையில், சர்வதேச மனித … Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நற்சான்றிதழ்களை கையளித்தார்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் தனது நற்சான்றிதழ்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்ததன் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக தனது பதவியை ஆரம்பித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. “இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன். ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், செழிப்பை அதிகரிக்கவும், அனைவருக்கும் ஆரோக்கியமான, இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்யவும் இந்த நாட்டு அரசு மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என்று தூதுவர் சுங் கூறினார். சியோலில் … Read more

இந்தோனேசியாவில் நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தோனேசியாவின் கரையோர வலையத்துக்கு அருகாமையில் இன்று (25) காலை நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இது 6.2 ரிக்டர் அளவை கொண்டதாக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உணரப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தேசிய ஊடகத்திலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி நீக்கம்: மனோ கணேசன் கண்டனம் (Video)

இலங்கை அரச ஊடகமான ரூபவாஹினி தொலைகாட்சி அலைவரிசையின் அடையாள குறியீட்டில் இருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி அகற்றப்பட்டமை பிரிவினைவாதத்தின் மற்றுமொரு நடவடிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபணம், “தேசிய” மற்றும் “இணைப்பு” மொழிகளை தனது “அடையாள குறியீட்டில்” இருந்து திடீரென தவிர்த்து கொண்டிருப்பது, கண்டிக்கதக்கது. தனியார் ஊடக நிறுவனங்கள் தங்களது, அடையாளத்தை எவ்விதமாக காட்டி, திருத்திக்கொண்டாலும், அரசாங்கத்தின் தேசிய ஊடக நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை … Read more

Statement on Developments in Ukraine

The Government of Sri Lanka is deeply concerned about the recent escalation of violence in Ukraine.   Sri Lanka calls upon all parties concerned to exercise maximum restraint and work towards the immediate cessation of hostilities, in order to maintain peace, security and stability in the region.   Sri Lanka emphasizes the need for concerted efforts by … Read more

வார இறுதி நாட்களில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு (Photos)

வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பகல் நேர மின்வெட்டு 3 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி அமையும் எனவும் அது குழுக்கள் A, B, C ஆகியவற்றின் கீழ் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேர மின்வெட்டு 2 1/2 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி இருக்கும் எனவும் மற்ற அனைத்து குழுக்களும்  இதில் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை (27) பகலில் … Read more