கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (25) பாராளுமன்றத்தில் முன்வைத்த இரங்கல் பிரேரணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த ரத்நாயக்க, ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ, சோமவீர சந்திரசிறி, பி.பீ.திசாநாயக்க மற்றும் எச்.ஆர்.மித்ரபால ஆகியோரின் மறைவு குறித்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (25) பாராளுமன்றத்தில் முன்வைத்த இரங்கல் பிரேரணை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த ரத்நாயக்க, ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்க்ஷ, சோமவீர சந்திரசிறி, பி.பீ.திசாநாயக்க மற்றும் எச்.ஆர்.மித்ரபால ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் பிரேரணையை நான் கௌரவ சபையில் முன்வைக்கிறேன். பொலன்னறுவையில் இருந்து அரசியலுக்கு வந்த ஆனந்த சரத் குமார ரத்நாயக்க அவர்கள், வடமத்திய … Read more

கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர் யார்? அம்பலப்படுத்தும் ஊடகம்

இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணத்தை செலுத்ததாக அமைச்சர் தொடர்பில் தகவல் வெளியாகி இருந்தது. சுகாதார அமைச்சர் தங்கியிருக்கும் வீட்டின் மின்சார கட்டணமே செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கான மின்சார கட்டண நிலவை 12,056,803.38 ரூபா இன்னும் செலுத்தப்படவில்லை என சபை சுட்டிக்காட்டியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் அவர் குடியிருக்கும் சரண வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கே மின்கட்டணம் செலுத்தவில்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் … Read more

ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு, முதலீட்டுச் சபையுடன் இணையவழி வலையமர்வு – ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையத்தள இணையவழி வலையமர்வில் 80க்கும் மேற்பட்ட எதிர்கால ஜப்பானிய நிறுவனங்கள் பங்கேற்றன. ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு ஒருங்கிணைப்புக்களை எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்பத் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விவசாயத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை அவர் வலியுறுத்தினார். இலங்கையில் கிடைக்கும் உயர்தர கிரஃபைட்டில் 30% ஈ.வி. பெட்டரிகளுக்கான மூலப்பொருளாகும் எனக் குறிப்பிட்ட தூதுவர், உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புக்களை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு … Read more

வார இறுதியில் மின் தடை வேண்டாம்! பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

இவ்வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்தபட்ச மின்வெட்டையேனும் விதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில் இடம்பெறும் அண்மைய மின்வெட்டுகளின் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இதன்காரணமாக, இவ்வார இறுதியில் மின்வெட்டை தவிர்க்குமாறு  மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவுறுத்தியுள்ளார்.   Source link

இந்திய அணி வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும் , இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்று ரி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சென்றுள்ளது.  இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது  ரி 20 போட்டி லக்னோவில் நேற்று (24) ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்டது. இந்திய … Read more

உலகளாவிய ரீதியில் எண்ணெய், தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – இலங்கையிலும் பாதிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலக சந்தையில் பாரிய மாற்றங்கள் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பல நாடுகளில் பங்கு பரிவர்த்தனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன், தங்கம் மற்றும் எரிபொருளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை தற்போது 105.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் WTI எண்ணெய் ஒரு பீப்பாய் 100.54 டொலராக உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலேயே இதுவே அதிகபட்ச எண்ணெய் விலையாகும். இதற்கிடையில், ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், … Read more

ஊடகங்களின் பௌதீக விரிவாக்கத்திற்கு ஏற்ப அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி அவசியம்

ஊடகங்களின் பௌதீக விரிவாக்கத்திற்கு ஏற்ப அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி தற்போது அவசியம் என்று அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, பாடசாலை ஊடகக் கழகங்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்காலம் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்சமயம் ஊடகங்கள் முழு சமூகத்தையும் உள்ளடக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது கடந்த ஆண்டு பிற்பகுதியில் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்ட … Read more

சுமத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம் – இலங்கை தொடர்பில் ஆராயும் மத்திய நிலையம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சுமார் 9.40 மணியளவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவின் வடக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நிலத்தின் அடியில் ஏற்பட்டதால் சுனாமிப் பேரலை எச்சரிக்கையை விடுக்கவில்லை என இந்தோனேசிய நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Source link

இலங்கையில் சிக்கியுள்ள உக்ரேன் நாட்டவர்களுக்கு நெருக்கடி நிலை

உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து அந்நாட்டுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள உக்ரைன் நாட்டவர்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர். தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாத நிலைமை காரணமாக தொடர்ந்து இலங்கையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த உக்ரைன் நாட்டவர்களுக்கு நாடு திரும்ப எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என தெரியாத நிலையில் தங்கள் உறவினர்களை தொடர்பில் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையால், அங்குள்ள … Read more