திறைசேரிக்குச் செலுத்தவேண்டிய உரிமைத்தொகையை செலுத்துங்கள்

புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகத்தின் ஊடாக அரசாங்கத்தின் திறைசேரிக்கு செலுத்தப்பட வேண்டிய உரிமைத்தொகை பல வருடங்களாக உரிய முறையில் பரிமாற்றம் செய்யப்படவில்லையென்றும், இதனை உரிய முறையில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவின் (கோப் குழு) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேரசிரியர் கௌரவ சரித ஹேரத் வலியுறுத்தினார். புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் 23.02.2022 அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதற்கமைய 2015 … Read more

மின் வெட்டு காரணமாக சுகாதார துறை முடங்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்று முதல் மின்வெட்டு ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாலும், எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு இல்லாமையாலும் சுகாதாரத் துறை விரைவில் முடங்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மற்றும் அவசரகால பதிலளிப்பு (DMER) பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று இதனை தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை தற்போது வைத்தியசாலைகளில் இருக்கும் மின்பிறப்பாக்கிகள் மற்றும் பேக்கப் ஜெனரேட்டர்களையே பெரிதும் நம்பியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு இதற்கு தடையாக இருக்கும். வைத்தியசாலைகளுக்கான மின்பிறப்பாக்கிகளை இலங்கை மின்சார சபையே … Read more

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான ஆலோசனை

உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் இது தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள 24×7 அவசர தொலைபேசி இலக்கமான +90 534 456 94 98, நிலையான தொலைபேசி இலக்கமான +90 312 427 10 32 மற்றும் … Read more

உக்ரைனில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய,உக்ரைனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அவசர தொலைபேசி இலக்கமான +90 534 456 94 98, +90 312 427 10 32 மற்றும் மின்னஞ்சல் முகவரியான [email protected] ஆகியவற்றிற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உக்ரேன்மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முதல் நாளான இன்று இரு … Read more

அதுகல்புர நுழைவாயிலில் முதல் மாதத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) திறந்து வைக்கப்பட்ட முதல் மாதத்தில், அரசாங்கம் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 15-01-2022 அன்று மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான இந்தப் பகுதி நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் முதல் 12 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. 16-01-2022 அன்று மதியம் 12.00 மணிக்குப் பிறகு நெடுஞ்சாலையில் பயணம் செய்ய கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. 16.01.2022 முதல் … Read more

நாடு ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது! – அமைச்சர் தயாசிறி ஜயசேகர

நாடு இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். டீசல் மற்றும் பெட்ரோல் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், சாலையில் எப்போது, ​​​​எங்கு வாகனங்கள் நிற்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார். துறைமுகத்தில் சிக்கியிருந்த டீசல் கப்பல் நிதிப் பற்றாக்குறையால் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்தில் … Read more

சில தினங்களில் மேலும் ஒரு கப்பலில் எரிபொருள்

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் குறைவடைந்துவிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. 35 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியை செலவிட்டு, விடுவிக்கப்பட்டுள்ள கப்பலில், 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசல் தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் மேலும் ஒரு கப்பல் எரிபொருளுடன் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

போதைப் பொருள் வியாபாரியின் மனைவி பெயரில் நீர்கொழும்பில் ஆடம்பர ஹொட்டல்

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் அண்மைய காலமாக ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளரின் சொத்துக்கள் சம்பந்தமாக நடத்திய மிகப் பெரிய சுற்றிவளைப்பை இன்று காலை மேற்கொண்டுள்ளனர். தெமட்டகொடை வசந்த என்ற இந்த போதைப் பொருள் விற்பனையாளரின் மனைவியின் பெயரில் இருந்த இந்த சொத்துக்களின் பெறுமதி சுமார் 32 கோடி ரூபாய் என தெரியவருகிறது. நீர்கொழும்பு பிடிபன கடற்கரைக்கு எதிரில் அமைந்துள்ள 100 பர்ச்சஸ் காணி அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹொட்டல் என்பனவும் இந்த சொத்துக்களில் அடங்கும். கடந்த … Read more

22 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈட்பட்டிருந்த இரண்டு ட்ரோலர் படகுகளை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். அவற்றிலிருந்த 22 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காங்கேசந்துறை – கோவிலன் கடற்பிரதேசத்தில் வைத்து படகுகளை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த மாதத்தில் மாத்திரம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈட்பட்ட எட்டு படகுகளில் சுமார் 51 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்! சந்தேகநபர் கைது

யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று காலை, யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றது. இந்த நிலையில் , மூதாட்டியின் படுகொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 73 வயதுடைய காணிக்கையம்மா ஜெயசீலி என்ற மூதாட்டியே பூச்சாடியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதேச … Read more