மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமாதான வேலைத்திட்டம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது. இம்மாவட்டத்திலிருந்து கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதார நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட வழிப்புனர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்கொண்டுள்ளார். அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொது இடங்களில் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வாராந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சிரமதான நடவடிக்கை … Read more

புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுமா? வெளியானது அறிவிப்பு

கோவிட் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளது. இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  Source link

மட்டக்களப்பில் தடுப்பூசி அட்டை: பாதுகாப்பு பிரிவினரால் பல இடங்களிலும் பரிசோதனை

மட்டக்களப்பில் கொவிட்19 தடுப்பூசி அட்டை ,பொலிஸ் மற்றும் இரானுவத்தினரால் பல இடங்களிலும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது ஒரு தற்காலிக பாதுகாப்பாக இருந்தாலும் ,தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே உயிரிழப்புகளில் இருந்து பாதுகாப்பு ஏற்படுத்தும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை ,பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடுபூராகவும் … Read more

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பேயில்லை! உறுதியான தகவல் வெளியானது

தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம் இலங்கையின் நாணயப்பெறுமதி டொலருக்கு நிகராக குறைந்த நிலையில் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் உள்நாட்டில் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். Source link

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்  போட்டி – முழு அனுமதி சீட்டுகளும் 5 நிமிடங்களில் விற்பனை

45 போட்டிகளுக்கான அனுமதி சீட்டுகள் 5 நிமிட காலபகுதிக்குள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வருட மத்திய காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான அனுமதி சீட்டுகளை ஒதுக்கி கொள்வதற்கு வசதியாக ஆரம்பிக்கப்பட்ட விற்பனையின் போது அனைத்து டிக்கெட்டுகளும் 5 நிமிடங்களில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்த போட்டிகளில் தொடர்புப்பட்ட 45 போட்டிகளுக்கான 2 இலட்சத்திற்கும் … Read more

கொழும்பில் வீதியில் நடந்து செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வீதியில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின் தெற்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருச்து 4 தங்க சங்கிலிகள் மற்றும் தங்க பென்டன்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இருவரும் 29 … Read more

இன்று சில பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

இன்று (09) நாட்டில் சில பிரதேசங்களில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இன்று (09) மாலை 4.00 மணி தொடக்கம் நாளை (10) 6.00 மணி வரையிலான 14 மணித்தியாலய காலப்பகுதியில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. கட்டுநாயக்க, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம், கட்டான (தெற்கு), சீதுவ, உடுகம்பொலவில் ஒரு பகுதி, மினுவாங்கொடையில் ஒரு பகுதியில், கட்டுநாயக்க விமானப்படை முகாம், ஏகல, கொடுகொட, உதம்மிட, ரஜ … Read more

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்ப இலகுவழி: செய்திகளின் தொகுப்பு(Videos)

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்குப் பணம் அனுப்பும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. LANKA REMIT என்ற செயலியே இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் வைத்து நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலியின் மூலம் எந்த நாட்டிலிருந்தும் இலங்கையில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடி பணப் பரிமாற்றச் சேவைகளைப் பெற முடியும். இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,  … Read more

75 உதவி செயலாளர்கள் நியமனம்

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை வெற்றிக்கொள்வதற்கு, அனைத்து பொதுமக்களின் பொறுப்புகளை ஆகக்கூடிய வகையில் நிறைவேற்றுவதே அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ  தெரிவித்துள்ளார் .அரச நிர்வாக சேவையில் புதிதாக உதவி செயலாளர்கள் சிலருக்கு நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 75 பேருக்கு இந்த நிகழ்வின்போது நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. புதிய அதிகாரிகள் நாட்டின் பல்வேறு நிர்வாக நிறுவனங்களில் சேவைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்நிகழ்வில் பொது நிர்வாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் … Read more

டொலர் நெருக்கடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொலர்களுக்கு பற்றாக்குறை இருந்தால் கடந்த ஆண்டினுள் 22 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும், கடந்த மாதம் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தது எப்படி என்று அவர் கேள்வி … Read more