இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு! – முதலீகளுக்கு தயாராகும் இந்தியா

 இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் குறைக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு நிலவுகிறது, இதனால் எரிபொருள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் கடந்த சில நாட்களாக பரவலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வரும் நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். டிசம்பரில் இந்தியா வந்திருந்த … Read more

மணமேடையில் ஆசையாக மணமகன் கொடுத்த பொருள்! கோபத்தில் மணப்பெண் செய்த காரியம்

வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக பார்க்கப்படும் திருமணத்தில் சில மறக்கமுடியாத நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இங்கு திருமணம் முடிந்து மணமேடையில் மணமக்கள் நிற்கும் போது, மணமகன் ஐயர் கொடுத்த இனிப்பினை மணமகளுக்கு கொடுக்கின்றார். ஆனால் மணமகளோ அதனை வாயில் வாங்கிக்கொள்ளாமல் திடீரென கோபத்தில் தூக்கி வீசி விடுகின்றார். பின்பு ஐயர் மணமகளுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுக்கின்றார். அதனை மணமகள் மணமகனுக்கு கொடுத்த போது அதனை அவரும் தூக்கி வீசி தனது கோபத்தினை வெளிக்காட்டியுள்ளார். … Read more

இந்தியாவால் வழங்கப்பட்டதும் குளிரூட்டல் வசதியுள்ளதுமான ரயிலின் வெற்றிகரமான பரீட்சார்த்தப் பயணம்

டீசலில் இயங்குவதும் குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட ரயில் தொகுதி(AC-DMU) ஒன்றின் பரீட்சார்த்தப்பயணம் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டநிலையில்,  இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், RITES நிறுவன பிரதிநிதிகள் மற்றும் இலங்கை புகையிரத திணைக்கள அதிகாரிகள் அந்த ரயிலில் பயணித்துள்ளனர். இந்தியாவால் வழங்கப்படும் 318 மில்லியன் அமெரிக்க டொலர்  கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்த ரயில் (AC DMU) வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட முதலாவது ரயில்(AC-DMU) 2022 ஜனவரி 09ஆம் திகதி … Read more

தவறான செயலில் ஈடுபட்ட பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

வட்டவளை டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தில் உள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்குவை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றதாகவும், 21ம் திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்ததாகவும் வட்டவளை பொலிஸார் … Read more

துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் சஃபாயர் தினம் (Sapphire Day) குறித்து கௌரவ பிரதமருக்கு விளக்கம்

துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று (22) அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்தனர். இலங்கையின் நீல இரத்தினக்கற்களுக்கு (Blue Sapphires) காணப்படும் உலகளாவிய கேள்வியை கருத்திற்கொண்டு நீல இரத்தினக்கற்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். அதற்கமைய பெப்ரவரி 26ஆம் திகதி துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் … Read more

இலங்கையின் இரத்தினங்கள் துபாய் கண்காட்சியில்

துபாயில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள  எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 நீலக்கற்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. துபாயில் நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று  அலரி மாளிகையில் சந்தித்தனர். இலங்கையின் நீல கற்களுக்கு (Blue Sapphires) காணப்படும் உலகளாவிய கேள்வியை கருத்திற்கொண்டு நீலக்கற்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். அதன்படி, முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேருக்கு சொந்தமான … Read more

3 வாரங்களில் பரசிற்றமோலுக்கான கேள்வி 275 சதவீதத்தால் அதிகரிப்பு

கொரோனா வைரசின் ஒமிக்ரோன் திரிபு, வைரஸ் காய்ச்சல், டெங்குப் பரவல் ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாக அதிகரிப்பு பரசிற்றமோலுக்கான கேள்வி அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். கடந்த 3 வாரங்களில் நாட்டின் பரசிற்றமோலுக்கான கேள்வி 275 சதவீதத்தால் உயர்ந்திருப்பதாக தெரிவித்த அவர் ,பரசிற்றமோல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யும் நிறுவனம் அவற்றை இறக்குமதி செய்ய பின்வாங்குவதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கூறினார்.

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு ஏற்பட்ட நெருக்கடி – கனவாக மாறிய ஆசைகள்

பாரிஸ் இருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட தம்பதி ஒன்று கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி குறித்த தம்பதி உட்பட 6 பேர் பாரிஸில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களின் பயணத்தை முடித்துக் கொள்ளும் திகதியாக கடந்த 27ஆம் திகதியை தெரிவு செய்திருந்தரனர். அதற்கேற்ப அனைத்த நடவடிக்கைகளையும் நிறைவு செய்துவிட்டு பிரான்ஸ் திரும்புவதற்காக PCR பரிசோதனை செய்த போது குறித்த தம்பதிக்கு கொரோனா தொற்று … Read more