இன்றைய (08.02.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர் பிரச்சினையைக் கண்டும் காணாமலும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரட்னம் இதனைக் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார். இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு, Source link
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதற்காக விசேட பிரச்சார நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டிகளை … Read more
இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடத்தப்பட்டால் அது சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும். தேர்தல் நடத்துவது குறித்து உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல், வாக்குச் சாவடிகள் நிறுவுதல் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் சட்டங்களை அமுல்படுத்துவது குறித்து பொலிஸ் … Read more
மத்திய மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக அந்த மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாகாணத்தில் இதுவரை 38 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இதுவரை 38 இலட்சத்து 85 ஆயிரத்து 685 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பு முடியும் தருவாயில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்நிய செலாவணி கையிருப்பு சிக்கல் காரணமாக கடந்த மாதம் மத்திய வங்கி ஒரு தொகுதி தங்க கையிருப்பினை விற்பனை செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மத்திய வங்கியிடம் 175 மில்லியன் டொலர் தங்க கையிருப்பு காணப்பட்டதாகவும், அது கடந்த மாதம் 92 மில்லியன் டொலராக குறைவடைந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் தங்க கையிருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் … Read more
பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழா இன்று 08 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் தலைமையில் இடம்பெறும். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கடந்த வருடம் பாராளுமன்ற ‘சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலுக்கான கட்டுரைகள் கோரப்பட்டன. சட்டவாக்க செயற்பாடுகள், … Read more
பாராளுமன்றத்தை இன்று (08) முதல் 11ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பிரதிச் சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நேற்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரையான பாராளுமன்ற அமர்வு தினங்களில் மாற்றம் செய்யப்படவில்லையென்பதுடன், 09ஆம், 10ஆம் திகதிகளில் பாராளுமன்ற அலுவல்கள் பின்வருமாறு … Read more
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்கள் பலருக்கு கோவிட் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்றின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று இன்று நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 50 பேர் வரையில் அண்மையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பது … Read more
07.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்