தடுமாறும் இலங்கை! திணறும் ஆட்சியாளர்கள் – திவால் நிலையை தொட்டுவிட்டதா இலங்கை?

சர்வதேச ரீதியில் கடந்த சில மாதங்களாக இலங்கையின் பொருளாதார நிலை முக்கியத்துவம் பெற்று வருகின்றது. தற்போது காணப்படும் மிகப் பெரிய பிரச்சினையாக டொலர் நெருக்கடி காணப்படுகின்றது. இதன் தாக்கத்தினை இலங்கை மக்கள் அன்றாடம் அனுபவித்து வருகின்றனர். சாமான்ய மனிதர்களால் சமாளிக்க முடியாத அளவு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன. மிகத் தெளிவாகக் கூறினால் அன்றாடம் இரண்டு மரக்கறிகள் மற்றும் ஒரு மாமிச வகையுடன் தமது உணவு பழக்கத்தை கொண்டிருந்த ஒரு குடும்பம் ஒரு … Read more

நாட்டினுள் எரிபொருளுக்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பு

நாட்டில் நாளாந்த எரிபொருள் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக் டொன்னாக இருந்த டீசலுக்கான கேள்வி தற்போது 8,000 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதேபோல், 3,000 மெற்றிக் டொன்னாக இருந்த பெற்றோலுக்கான வாராந்த கேள்வி, 4,500 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இது ஒரு பாரதூரமான நிலை என்று சுட்டிக்காட்டிய அவர், இதனைக் … Read more

நாடு பூராகவும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு – நாளை முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து நாளையதினம் (23) மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மை காரணமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளுக்கு 4 மணித்தியாலங்கள் 30 நிமிட மின்வெட்டும் மேலும் சில பகுதிகளுக்கு 4 மணித்தியாலங்கள் 40 நிமிட மின்வெட்டும் அமுல்படுத்த, இலங்கை மின்சார சபைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டை … Read more

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் உட்பட அனைத்துத் தொகுப்புகளும் பாராளுமன்றத்தில் ஒப்படைப்பு…

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய சாட்சியப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணத் தொகுப்புகளை, பாராளுமன்றத்தில் ஒப்படைத்தது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியங்களுக்கமைய தயாரிக்கப்பட்ட 88 தொகுப்புகளுடனான முழுமையான அறிக்கை, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர அவர்களினால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களிடம் இன்று (22) முற்பகல் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் … Read more

இலங்கையில் கார் கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

இலங்கையில் கார்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் சரியான தகவல்களின்றி அதிக விலை கொடுத்து பயனற்ற கார்களை கொள்வனவு செய்வதாக தெரியவந்துள்ளளது. இதனால் ஏற்கனவே பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். “இது என தனிப்பட்ட அனுபவம். Toyota Vitz 2016 ரக கார் ஒன்றை நான் … Read more

புதுடில்லியில் உள்ள தூதரகப் படையினருக்கு மத்தியில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் உரை  

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 பெப்ரவரி 18ஆந் திகதி புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் படையினருக்கு மத்தியில் உரையாற்றினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். தற்போதைய அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளக்கங்களின் தொடர்ச்சியாக, புதுடில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற … Read more

கழிப்பறைக்குள் மாணவிகளை படமெடுத்த இரகசிய கமரா – தாய் வெளியிட்ட வீடியோ மாயம்

கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழிவறையில் கமரா பொருத்தப்பட்டதை வெளிப்படுத்திய தாயாரின் காணொளி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மேலதிக வகுப்பு நிறுவனம் நிரோஷா களுஆராச்சி என்ற நபரால் நடாத்தப்படுவதாகவும், அந்த நிறுவனத்தின் முகாமைத்துவம் (அட்டை சேகரிப்பு போன்றவை) நிறுவன தலைவரின் தாயாரால் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கெமுனு ரணவீர என்ற ஆசிரியரின் தகவல் தொழில்நுட்ப வகுப்பில் கலந்து கொண்ட மாணவியால் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமரா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி … Read more

மறுசீரமைக்கப்பட்ட 200 பஸ்கள் மீண்டும் சேவைக்கு

பழுதடைந்த நிலையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த 200 பஸ்களை மறுசீரமைத்து மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள், புகையிரதப் பெட்டிகள், மோட்டார் வாகனக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்களின் யோசனைக்கமைய, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெக்கப்பட்டது. வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை அடுத்து, பஸ் கொள்வனவும் … Read more

உக்ரைன் பதற்றம்! ரஸ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் முதலாவது பதில் நடவடிக்கை அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள ரஸ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ரஸ்யா – உக்ரைன் இடையிலான மோதல் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இருநாடுகள் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் ரஸ்ய ஜனாதிபதி யுக்ரைனின் இரண்டு பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ள நிலையில், எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனையடுத்தே உக்ரைனில் உள்ள ரஸ்ய … Read more

முல்லைத்தீவில் முத்தையன் கட்டு குளத்தின் கீழ் இவ்வாண்டு 3,731 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன் கட்டு குளத்தின் கீழ் இவ்வாண்டு 3,731 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2,746 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கையும் 984 ஏக்கர் நிலப்பரப்பில் வேறு பயிர்ச் செய்கையும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயிர்ச் செய்கைக்கு எதிர்வரும் முதலாம் திகதி குளத்தின் நீர் திறந்துவிடப்படும் என்றும் எதிர்வரும் ஜூலை மாதம் 15ம் திகதி வரையான காலப்பகுதியில் நீர் விநியோக காலப்பகுதியாக இருக்கும் என்றும் குறித்த காலப்பகுதியில் விவசாயிகள் … Read more