எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது! பாலித ரங்கே பண்டார: செய்திகளின் தொகுப்பு

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் டொலர் பற்றாக்குறையால் மூன்று நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இந்த கப்பல்களிலுள்ள எரிபொருளை உடனடி ஒழுங்கு முறையின் கீழ் அரசாங்கம் இறக்குமதி செய்த போதிலும், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டொலர்கள் கிடைக்காததால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் … Read more

5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி

5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இதேவேளை, கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பிள்ளைகளுக்கு கொவிட் தொற்றுடன் தொடர்புபட்ட ‘மிஸ் சி’ ஆரடவளைலளவநஅ ஐகெடயஅஅயவழசல ளுலனெசழஅந in ஊhடைனசநn (ஆஐளு-ஊ)நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும்;, இது … Read more

ஊடகவியலாளர் சமுதித்தவிற்கு பொலிஸ் பாதுகாப்பு

பிரபல ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சமுதித்த வசிக்கும் பகுதிக்கு போதியளவு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தமக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சமுதித்த பிலியந்தல நீதவான் நீதிமன்றில் ஊடகவியலாளர் சமுதித்த கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தது. எனினும் தமக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சமுதித்த குற்றம் சுமத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து உரிய பாதுகாப்பு வழங்க … Read more

வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது. நாட்களில் கொவிட் தொற்றுக்கு சமனான வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றன பரவி வருவதனால், பெற்றோர்கள் தமது குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மொழி கற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

இலங்கைக்காக புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் தமிழ் மற்றும் சிங்கள மொழி கற்கும் புகைப்படங்கள் சிலவற்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சிறிய பதிவொன்றை பதிவிட்டவர், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வது தகவல் தொடர்புக்கு மாத்திரமல்ல நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கற்பதற்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். “எனது உச்சரிப்பு சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்!” என மூன்று மொழிகளிலம் அவர் பதிவிட்டுள்ளார். இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி ஜே.சன்ங் பதவியேற்பதற்காக கடந்த 18ஆம் … Read more

ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி உத்தரவு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பல்வேறு துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து அதனை வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். 2268/03 என்னும் இலக்கத்தை கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகம், வைத்தியசாலைகளில் பராமரிப்பு பணிகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் இதற்கு நிகரான நோயாளிகளை பராமரிக்கும் சேவைகள், சிகிச்சை அளித்தல் சேவைகள் உள்ளிட்டன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.    … Read more

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம்! – வங்கிகளுக்கு தடை விதிப்பு?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வங்கிகள் கடன் வழங்குவதைத் தடைசெய்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விசேட சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து கடன்களை வழங்குவதால், அரசாங்கத்தின் வங்கி அமைப்பு எதிர்காலத்தில் இயங்க முடியாது மற்றும் வீழ்ச்சியடையக்கூடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். இதன் காரணமாக அரசின் வங்கி அமைப்பு சீர்குலைந்தால் அதற்கு தாம் … Read more

உலகின் தென் துருவப் பகுதிக்கு பயணித்த முதல் இலங்கையர்!

இலங்கையைச் சேர்ந்த தினுக கருணாரத்ன அண்டார்டிகாவின் தென் துருவப் பகுதிக்கு பயணித்துள்ளார். இந்நிலையில், அண்டார்டிகாவுக்குச் சென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை தினுக கருணாரத்ன பெற்றுள்ளார். இலங்கையின் கண்டியில் பிறந்த இவர் தற்போது அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் வசிக்கிறார். அண்டார்டிகாவுடன் இணைந்த 12 நாடுகளின் கொடிகள் தென் துருவத்தில் ஏற்றப்பட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிற்கு சொந்தமானது மற்றும் அந்த இடத்தில் பூமியில் அறிவியல் ஆராய்ச்சி நடத்துகிறது. மைனஸ் 40 பாகை செல்சியஸாக வெப்பநிலை … Read more

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்காலத்தில் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் போது, இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளுர் கைத்தொழில்களில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதில் இணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு இதன்போது அழைப்பு விடுத்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி என்ற வகையில், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய … Read more