இன்று முதல் நாட்டில் நாளாந்த மின் துண்டிப்பு! சற்று முன் திடீர் அறிவிப்பு

நாட்டில் நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சற்றுமுன் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் வைத்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.  இதன்படி பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும்  என மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டானது இன்று முதல் அமுலாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தெரிவிக்கப்பட்டுள்ள நேர அளவு நாளாந்த … Read more

அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது கிளை யாழ் மாவட்டத்தில் இன்று திறப்பு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு அலுவலகம் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று (18) திறக்கப்படவுள்ளது. இது அரச வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது கிளையாகும். இதனூடாக பாடசாலை மாணவர்கள், உயர் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் அரச ஊழியர்கள் அடங்கலாக தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கும் யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் அனைத்து வெளியீடுகளையும் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க … Read more

400 ரூபாவாகும் பாணின் விலை! வெளிவந்துள்ள தகவல்

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகிறது. அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. . இன்று ஒரு இறாத்தல் … Read more

இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 பெப்ரவரி 18ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின்,வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளைமாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், … Read more

நாட்டில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறதா?

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித இதனை  வெளியிட்டுள்ளார்.  மேலும், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  Source link

கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில … Read more

எரிபொருள் தட்டுப்பாட்டினால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் ஸ்தம்பிதம்

எரிபொருள் தட்டுப்பாட்டினால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதனால் தேசிய ரீதியான மொத்த மின் உற்பத்தியில் 163 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.  இந்த மின் உற்பத்தி நிலையத்தில் நெப்தா எனப்படும் எரிபொருளைக் கொண்டு மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Source link

பெப்ரவரி 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்  தம்மிக்க தஸநாயக தெரிவித்தார். இதற்கமைய பெப்ரவரி 22ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இறப்பர் மீள்நடுகை … Read more

கனடாவில் தஞ்சம் அடைய தனது வீட்டில் தாக்குதல் நடத்தினாரா சமுதித்த?

இலங்கையின் பிரபல ஊடகவியலாளரான சாமுதித்த சமரவிக்ரமவின் வீடு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட பின்னணியில் குறித்து பல்வேறு கருத்து வெளிவருகின்றன. கனடாவில் அரசியல் தஞ்சம் பெறுவதாக தனது வீட்டை சமுத்தித்த தாக்கியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சமுத்தித்த, தனக்கு சில காலங்களுக்கு முன்னரே அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான நுழைவு விசா வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் தனது குடும்பத்துடன் கனடா செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் … Read more

பிராந்திய விடயங்கள் தொடர்பாக பிராந்திய விடயங்கள் தொடர்பாக ஆராய்வு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் உலக விவகாரப் பிரிவின் உதவி செயலாளர் டொம் மெனடு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள் பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று (பெப்ரவரி 17) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலி தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக் குழுவினரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திர … Read more