இத்தாலியில் இலங்கை பெண் கொடூரமாக கொலை! – மகன் கைது

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனது வீட்டில் இலங்கைப் பெண்ணை கொலை செய்ததாகக் கூறப்படும் 25 வயது இளைஞனை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாத்தாண்டிய முதுகடுவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ரத்நாயக்க வயது 54 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை … Read more

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு நேற்று (17) பிற்பகல் தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போதே கௌரவ தபிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் … Read more

இலங்கையில் கட்டாயமாகும் தடுப்பூசி அட்டை! – வெளியாகியுள்ள அறிவிப்பு

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை அடையாளம் காணும் செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். “பொது இடங்களுக்குள் வருபவர்களுக்கு கட்டாயம் முழு தடுப்பூசி போடுவது ஏப்ரல் 30ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு தடுப்பூசி அட்டை தேவைப்படும்.” “இந்த நாட்களில் நாங்கள் மற்ற விஷயங்களில் வேலை செய்கிறோம். பொதுமக்களுக்கு எளிதான செயலி … Read more

கொவிட் நோயாளர்கள் வைத்திய சிபாரிசு இன்றி மீள்சக்திக்கான மருந்தை பயன்படுத்த வேண்டாம்

கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் மருந்து வகைகளை எடுக்கும் போது அவர்களுக்குள்ள  நோய் அறிகுறிகளுக்கு  மாத்திரம் மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார பிரிவு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. வைத்திய சிபாரிசு இன்றி மீள்சக்திக்கான எந்த மருந்து வகைகளையும் எடுக்க வேண்டாம் என்று இயன் மருத்துவர் (physiotherapist) விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன ,சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று மாலை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வு! – வெளியாகியுள்ள விலை நிலவரம்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் நாள் குறித்து மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். பயன்படுத்திய வாகனங்களின் அதிக விலையே இதற்குக் காரணம். கோவிட் பரவல் தொடங்கியதில் இருந்து பல சந்தர்ப்பங்களில் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைத்த சுசுகி ஆல்டோ காரின் விலை தற்போது 4 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட சுசுகி வேகன் ஆர் இன் விலை … Read more

வெளிநாடுகளில் பணியாற்றும் 950 இலங்கையர்கள் டிஜிட்டல் பதிவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்கள் 950 பேர் தேசிய விஞ்ஞான அமைப்பின் உலகளாவிய டிஜிட்டல் மேடையில் பதிவுகளை மேற்கொண்டிருப்பதாக அதன் சர்வதேச தொடர்புகள் குறித்த பிரிவின் தலைமை அதிகாரி ஜெ.பீ சாந்தசிரி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

பலரின் முன்னிலையில் மனைவியை தாக்கிய இராணுவ அதிகாரி

பனாகொடை இரைாணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ மேஜர் ஒருவர் பௌர்ணமி தினமான நேற்று பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபலமான விகாரை ஒன்றில் வைத்து தனது மனைவியை தாக்கியுள்ளார். சிறுவர்கள் உட்பட விகாரைக்கு வந்திருந்த பெருந்திரளான பக்தர்களுக்கு எதிரில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. மேஜரின் தாக்குதலுக்கு உள்ளான மனைவி, பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தேக நபரான இராணுவ அதிகாரியை பாணந்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். இருவருக்கும் இடையில் இருந்து வந்த குடும்ப சண்டை … Read more

வட மாகாணத்தில் மலேரியா தொற்று பரவும் அபாயம்

வட மாகாணத்தில் தற்பொழுது  மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நான்கு  வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக அமையும் என்று சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். இந்த நான்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார். இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், … Read more

போரின்போது இடம்பெற்ற கொடுமைகள்! வெளிவந்த தகவல்கள்

இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம்  என சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தில் தேர்ச்சிபெற்ற சட்டத்தரணியும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாலினம் தொடர்பான முன்னாள் ஆலோசகருமான பிரியா கோபாலன் தெரிவித்துள்ளார்.  மேலும், இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இன்றியமையாதது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.    ‘இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறும் போக்கிற்கு எதிரான போராட்டத்தை வலுவூட்டுதல்’ என்ற தலைப்பில் … Read more

மின்சார கட்டணத்தை செலுத்தாவர்களுக்கு விசேட அறிவிப்பு

மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு அதற்கான மேலதிய கட்டணத்தை அறவிடுதல் அல்லது அவர்களுக்கான மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருப்பதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இததொடர்பான உத்தரவு இன்று வெளியிடப்பட இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.