இரு கட்சி சின்னங்கள் நீக்கப்பட்டன! வெளியானது அதிவிசேட வர்த்தமானி

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்படாமலுள்ள கட்சி சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதுடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.  குறித்த அறிவிப்பின் படி அந்த பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் , கண் சிகிச்சை நோயாளிகளுக்கான உள்ளக வார்ட் திறப்பு

வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவ நோயாளிகளுக்கான உள்ளக வார்டு வசதி அப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் 2022 பெப்ரவரி 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில் அதிதிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் பி.ஜெயன் மெண்டிஸ், வைத்தியசாலை சேவையின் பணிப்பாளர் பிரிகேடியர் பி.எஸ்.திலகரத்ன, நிர்வாகப் பணிப்பாளர் கேர்ணல் ஈஎம்ஜீஎச்கேபி தெஹிதெனிய RWP RSP … Read more

கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் பாலியல் பிரச்சினைகள்

கோவிட் தடுப்பூசி ஆண்மைக் குறைவை ஏற்படுத்துவதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இல்லை என மருத்துவர் பிரியங்கர ஜெயவர்தன தெரிவித்துள்ளார். கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சில பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம் என்றாலும், கோவிட் தடுப்பூசியால் ஆண்மைக்குறைப்பாடு பிரச்சினைகள் தொடர்பில் ஆதாரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, பாலியல் செயற்பாடு மற்றும் குழந்தையின்மை போன்ற சிக்கல்களைத் தவிர்க்க கோவிட் தடுப்பூசியை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உட்பட அனைவருக்கும் கோவிட் … Read more

நான்காவது கொழும்பு கடற்படைப் பயிற்சி நிறைவு

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட நான்காவது கொழும்பு கடற்படை பயிற்சி – 2022 திங்கட்கிழமை (பெப்ரவரி, 14) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த கடற்படை பயிற்சி இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சியானது கடற்படை வீரர்களின் தொழில்முறை மற்றும் அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் கடல் சார் பயிற்சிகள், நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹாவிதான தலைமையில் இலங்கை … Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக ரத்து செய்ய முடியாது! அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்

பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்று முழுதாக ரத்து செய்ய முடியாது என அரசாங்கம் கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்தால் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 310 பேர் விடுதலைலயாகும் சாத்தியம் காணப்படுவதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்களை சுட்டிக்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாகவே தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணை செய்ய முடிந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை … Read more

இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை மற்றும் பெலாரஸ் மேம்படுத்தல்

பெலாரஸ் குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ரஷ்யாவுக்கான தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, 2022 பிப்ரவரி 02-05 வரையான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பெலாரஸ் அதிகாரிகளுடன் பல சந்திப்புக்களை நடத்தினார். மின்ஸ்கில் தங்கியிருந்த தூதுவர், பெலாரஸ் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம் தனது நற்சான்றிதழ் கடிதங்களை வழங்கி வைத்ததுடன், வெளிவிவகார அமைச்சர் மாண்பமிகு விளாடிமிர் மேக்கியுடன் உரையாடிய அதே வேளையில், ஒத்துழைப்பின் வாய்ப்புக்கள் குறித்து பெல்டா செய்தி நிறுவனத்திற்கு செவ்வியளித்தார். பேராசிரியர் … Read more

இலங்கை வருகின்றார் அமெரிகாவின் புதிய தூதுவர்!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார். அவர் தனது நற்சான்றிதழ்களை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அரசாங்கத்திடம் கையளிப்பார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். ஈராக்கின் … Read more

இலங்கையில் கோவிட்டுக்கு மருந்து கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தியவரின் வீட்டில் நடந்த சோகம்

கோவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 58 வயது எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த … Read more

219ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் கௌரவ பிரதமர் பங்கேற்றார்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 219ஆவது தர்ம உபதேசம் இன்று (2022.29.16) அலரி மாளிகையில் நடைபெற்றது. வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து கௌரவ பிரதமர் தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த மஹவ, இபலோகம ஸ்ரீ போதிருக்காராமதிகாரி, இலங்கையின் பௌத்த மறறும் பாலி பல்கலைக்கழகத்தின் முதுகலை கற்கைநெறி பீட பீடாதிபதி பேராசிரியர் வணக்கத்திற்குரிய மொரகொல்லாகம உபரதன தேரரை வரவேற்றார். பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் … Read more

செயலாளரை கடுமையாக திட்டிய இராஜாங்க அமைச்சர்? பதவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

பலம் வாய்ந்த அமைச்சு ஒன்றில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது அமைச்சின் செயலாளரை கடுமையா திட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கைகள் சட்ட விரோதமானவை எனவும் அவற்றை நிறைவேற்ற முடியாது எனவும் செயலாளர் தெரிவித்தமையே இதற்கான காரணம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த இராஜாங்க அமைச்சர் பதவி விலகும் வரை நிலைமை மோசமடைந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source … Read more