இன்றைய (15.02.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடி இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு செல்ல திட்டமிடுவதான செய்திகள் வெளிவந்துள்ளன. பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் குறித்து இந்தியத்தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது … Read more
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பத்தரைக்கட்டை கிராமத்திற்கு குடிநீர் இணைப்பை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நேற்று (14) திங்கட்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது. இந்த திட்டத்தை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தன் ஆரம்பித்துவைத்துள்ளார். அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 150 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், இதற்காக சுமார் 50 மில்லியன் ரூபா நிதி முதற்கட்டமாக … Read more
மருத்துவ பணிப்பாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாவது நாளாகவும் மருத்துவ பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது ஏழு கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சாதகமான பதிலை அளித்த போதிலும் உறுதி மொழி எதனையும் வழங்கவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எவ்வாறெனினும், இன்றைய தினம் காலை 9 மணிக்கு மீண்டும் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மருத்துவப் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தினால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். … Read more
Expert Panel Discussion on “ Achieving Low Carbon Development Targets in the Power Sector” The Centre for Banking Studies (CBS) of the Central Bank of Sri Lanka (CBSL) has made arrangements to conduct above captioned webinar on 17th February 2022. Considering the prevailing situation in the country, the CBS has arranged this forum as a web-based forum on Thursday, 17th February … Read more
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எந்தவொரு நபருக்கும் தாம் விரும்புவது போன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு இடமளிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள். ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மற்றும் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் … Read more
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறும். அப்போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவிக்கையில், இந்த அறிக்கை மார்ச் மாதம் 3ம் திகதி கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படும். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு … Read more
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ‘விரு அபிமான’என்ற புதிய கடன் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. வீடுகள் கட்டுவதற்காக இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறது. Source link
தாம் வைத்தியர் என்று கூறிக்கொண்டு போதை வில்லைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தியராகத் தோன்றி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்ததாகவும் போதை வில்லைகளை விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து 338 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வில்லைகளை வாங்குவதற்காக வந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் திம்புல-பத்தன பொலிசார் மேலதிக விசாரணைகளை … Read more
அதிவேக நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் வாகன இறக்குமதிக்கான தடையை மீறி இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு சொகுசு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டடை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய காணொளி காட்சிக்கு பதிலளிக்கும் வகையில் சுங்க பிரதிப் பணிப்பாளரும் (சட்ட) ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா இதனைத் தெரிவித்தார். கடுவெல முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் பெறுமதி கூட்டப்பட்டதன் … Read more