இலங்கை அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி 20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற இந்தப் போட்டி முடிவில் இரு அணிகளும் தலா 164 ஓட்டங்கள்  பெற்றதனால் போட்டி சமநிலையில் இருந்தது. இதனால் இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 ஆவது பந்திலேயே வெற்றி பெற்றது. இப்போட்டியில் … Read more

பெரும் நெருடிக்கடியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! விரைவில் எரிபொருளுக்கு நெருக்கடி?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தினால் டொலர்களைப் பெறுவதற்கு ரூபா கிடைக்காததால் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. டொலர் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கூட்டுத்தாபனம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்குமாறு அல்லது எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலையை அப்படியே பேணுவதன் மூலம் தமக்கு … Read more

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று (14) ஆரம்பமானது. இந்த கொடுப்பனவை 28 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 15 ஆயிரம் மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 3,500 ரூபா சமுர்த்தி கொடுப்பனவை பெற்றவர்கள் இன்று முதல் 4,500 ரூபாவை பெறத் தகுதி பெற்றுள்ளனர். அதேபோல் 2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்றவர்கள் 3,200 ரூபாவையும், 1,500 ரூபாவை பெற்றவர்கள் 1,900 ரூபாவையும் பெறவுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள சமுர்த்தி வங்கிகள் ஊடாக இந்தக் கொடுப்பனவை … Read more

2009இல் ஈழத்தமிழரை அழித்த அமெரிக்கா! ரஸ்யா – உக்ரைன் விவகாரத்தில் மாற்று வியூகம்

உக்ரைன் மற்றும் ரஸ்யா இடையேயான போர் பதற்றம் என்பது பேரம் பேசுவதற்கான யுத்தமாகவே காணப்படுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உக்ரைன் – ரஸ்யா இடையேயான போரை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டால் 40 லட்சம் அகதிகள் வெளியேறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அகதிகள் தொடர்பான நெருக்கடி காரணமாக … Read more

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பலரும் கண்டித்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அமைச்சர், பொலிஸ்மா அதிபரைக் கேட்டுள்ளார். இந்தத் தாக்குதல் வெட்கப்பட வேண்டிய கடுமையான சம்பவமாகும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் விரிவாக விசாரித்து இந்தத் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது பற்றி நாட்டிற்குத் தெளிவுபடுத்த வேண்டுமென அந்த இயக்கம் கேட்டுள்ளது. ஊடக சுதந்திரத்திற்கு … Read more

நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் அறவிடப்படும் 25 வீத மேலதிக வரி ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்களிடம் அறவிடப்படமாட்டாது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் நிதி அமைச்சர் நீண்ட விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெருவோருக்கு மட்டுமே 25 வீத ஒரு நேர வரி அறவிடப்படும் என நிதி … Read more

சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண கொடுப்பனவு

சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இன்று (14) உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.எ.அஸீஸ்,  பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாஸர்,பி.எம்.காசிம் கலந்து கொண்டனர். இப் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மாஞ்சோலை 207யு சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த சமுர்த்தி கொடுபுப்பனவும் இன்று வழங்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். நியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று … Read more

நாட்டின் தற்போதைய நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளது. முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களால் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்ரிஸ் தெரிவித்தார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவல் காணப்படுகிறது. தற்போது வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்கள் அனைவரும் எந்தவொரு … Read more

உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலை:தொடர்ந்தும் கண்காணிப்பு

உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வகின்றது. உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, அங்கு வசிப்பவர்களை வெளியேறுமாறு பல நாடுகள் தற்போது வலியுறுத்தி வருகின்றன. தற்போது உக்ரேனில் சுமார் 40 இலங்கையர்கள் இருக்கின்றனர். அவர்களில் 7 பேர் மாணவர்கள். அவர்கள் தற்போது எவ்வித பிரச்சினையுமின்றி அந்நாட்டில் தங்கியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரேனில் இலங்கைக்கான தூதரககம் ஒன்று … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் பல்வகை போக்குவரத்து மையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் பல்நோக்கு பொது போக்குவரத்து மையத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்துடன் வெயங்கொட மற்றும் ஒருகொடவத்தை புகையிரத நிலையங்களை இணைக்கும் விரிவான புகையிரத பாதையை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். Source link