“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை அல்லது அளவு ஒரு பொருட்டல்ல…” ஜனாதிபதி தெரிவிப்பு

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே சமயம், நாட்டின் அபிவிருத்திப் பணிகளும் முன்னெக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, சுமார் இரண்டு வருடக் காலமாக நாட்டை மூடி வைத்ததால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார். “ஜனாதிபதி மீது … Read more

இலங்கையில் தினசரி 6 மணிநேர மின்வெட்டு! வெளியான பகீர் தகவல்

நீர் மின் உற்பத்தியுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீரை கொண்டு இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே மின் உற்பத்தியினை மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படாவிட்டால் தினசரி 6 மணிநேர மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு மின்சார நுகர்வோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கோரிக்கை … Read more

உக்ரைன் பயணங்களை தவிர்க்கவும்! சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான மோதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில், உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா விவகாரம் நாளுக்கு நாள் இறுக்கமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர கெடு விதித்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் அந்நாட்டு மக்களுக்கு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இருப்பினும், நாட்டை விட்டு … Read more

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மையா? ஆராய்ச்சியில் வெளியானது உண்மை தகவல்

Courtesy: Maalaimalar அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் பிற கோள்களை ஆராய்ச்சி செய்தனர். விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது. ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட் படங்களும் வெளிவந்துள்ளன. இதனால், மக்களின் மனதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தன. இந்நிலையில், அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதில், மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர். … Read more

ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து இந்தியாவை அணுகுவது

Courtesy: கட்டுரை: நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் “நாங்களும் இந்தியாவின் தலையீட்டைக் கோரித்தான் நிற்கிறோம்” என்று கூறுகிறார். அவருடைய கட்சி கிட்டு பூங்காவில் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலும் இந்தியா ஒரு நட்பு சக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தியத் தலையீட்டைக் கேட்பது என்று முடிவெடுத்தால் ஆறு கட்சிகளின் கூட்டு அழைத்தபோது அதில் இணைந்து கூட்டுக்கோரிக்கையின் வடிவத்தை மாற்றியிருந்திருக்கலாந்தானே? மேலும், 13க்கு எதிராக அக்கட்சி மக்கள் … Read more

இலங்கையில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் தேர்தல்

அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களில் இடம்பெற்ற கறுவாப் பட்டை வழங்கும் நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மக்கள் பேரணியின் இரண்டாவது பேரணி மாத்தறையில் நடைபெறவுள்ளதாகவும்  இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலாவது மக்கள் பேரணி அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்றதுடன், இவ்வாறான பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கான காரணங்கள் குறித்தும் … Read more

கோட்டாபய கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு வரவேண்டாம்! அமைச்சருக்கு சென்ற பகிரங்க அறிவித்தல்

அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசளை பிரச்சினையால் விவசாயிகள் அமைச்சர் மீது கடும் எதிர்ப்பை கொண்டுள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஜனாதிபதி இருக்கும் மேடையில் கமத்தொழில் அமைச்சருக்கு எதிராக ஹூ சத்தமிட்டு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டால், அது அந்தளவுக்கு பொருத்தமாக இருக்காது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் பிரதான பேச்சாளர்களில் … Read more

28 வயது பெண் நடன கலைஞர் எடுத்த தவறான முடிவு! மீட்கப்பட்ட சடலம்

கொழும்புக்கு அருகில் உள்ள மகரகமை நகரில் உள்ள ஆடம்பர வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடொன்றில் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்த பெண் நடன கலைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அபகஸ்வெவ ஹிரியால, நரணகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணின் உடலை களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக ஒருவர் நேற்றிரவு தொலைபேசியில் அறிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நபர் அங்கு இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து உடலை … Read more

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மற்றொரு கடுமையான பிரேரணையுடன் பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பிரேரணையை இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கான பொறுப்புக் கூறலின் தாமத நிலை மற்றும் அண்மைய கால உரிமைகள் மீறல்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனக் கொழும்பு இராஜதந்திர மட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. பிரித்தானியா கொண்டுவரவுள்ள இந்தப் புதிய பிரேரணைக்கு ஐரோப்பிய … Read more

இலங்கை மக்களுக்கு வழங்கப்படவுள்ள வரப்பிரசாதங்கள்! வர்த்தக அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் புத்தாண்டு காலத்திலிருந்து நுகர்வோருக்கு ஒரு கிலோ சம்பா அரிசி 125 ரூபாவிற்கு வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலி, உனவடுனவில்  வைத்து  இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,  பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு விசேட நிவாரணங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link