மஹிந்தவின் கடும் கோபத்திற்குள்ளான தென்னிலங்கை அமைச்சர் – பொதுவெளியில் நடந்ததென்ன?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது வெளியில் கடுமையாக செயற்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நடந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அமைச்சர் ரோஹித அபேவர்தன கருத்து வெளியிட்டுள்ளார். அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது பிரதமர் மஹிந்த கோபமாக, ரோஹிதவின் கையை தட்டி விட்டார். மஹிந்தவின் கையை அமைச்சர் ரோஹித அபேவர்தண பிடிக்க சென்ற போது அதனை பிரதமர் கோபத்துடன் தட்டிவிடும் காணொளி … Read more

கொழும்பு புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினருக்கும் நபருக்கும் இடையில் மோதல் – ஒருவர் சுட்டுக்கொலை

கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினருக்கும் நபர் ஒருவருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் பாதாள உலகக்குழு உறுப்பினர் எனவும், 26 வயதான ‘அப்bபா’ (Abba) என்றழைக்கப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டுபாயில் உள்ள ‘பாணந்துற சாலிந்த’ என்ற நபருக்கு நெருக்கமான ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். … Read more

இலங்கையில் தீவிரமடைந்துள்ள கோவிட் தொற்று – 3 நாட்களில்102 பேர் மரணம்

பதுளை பொது வைத்தியசாலையில் 20 வைத்தியர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் பயணியாற்றும் ஒன்பது வைத்தியர்களில் ஆறு பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.. பரிசோதனைகளின் மூலம் பதிவாகும் நோயாளர்களை விட சமூகத்தில் அதிகமான நோயாளிகள் இருக்கலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த … Read more

ஒருவரின் பெயரில் பல சிம் அட்டைகள்! – புதிய சட்டங்களை உருவாக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம் அட்டைகளை பதிவு செய்வதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீதியமைச்சர் அலி சப்ரி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. “சில நேரங்களில், ஒரு நபரின் பெயரில் பல சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு தங்கள் … Read more

தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு இலங்கை அரசு முயற்சி!

தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இதனை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. … Read more

இலங்கை வங்குரோத்து நிலையை அடையும்! – Financial Times தகவல்

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி Financial Times வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019ம் பாரிய வரிக் குறைப்பு செய்யப்பட்டதுடன், கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. வட்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த … Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்பு!

 இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார். இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக பிரதி இராஜாங்கச் செயலாளர் வெண்டி ஆர். ஷெர்மன் ட்வீட் செய்துள்ளார். சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். ஈராக்கின் பாக்தாத்தில் … Read more

நீங்கள் உயர்தரத்திற்கு தெரிவாகவில்லையா? அரசாங்கம் வழங்கும் சிறந்த வாய்ப்பு

2020ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறாது, உயர்தரத்திற்கு தகுதி பெறாத மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 2020ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி, உயர்தரத்திற்கு பிரவேசிக்க தகுதி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 98000 என கணிப்பிடப்பட்டுள்ளது. கணித பாடத்தில் தகுதி பெறாது, கணித பாடத்தில் சித்தியை பெற்றுத் தருவதாக கூறி, உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களை … Read more

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய எச்சரிக்கை! திரைமறைவில் தீட்டப்படும் சதி

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய எச்சரிக்கை! திரைமறைவில் தீட்டப்படும் சதி Source link

குருவானவரை கொடூரமாக கொலை செய்த கிராமத்தினர்! திகிலூட்டும் பின்னணி (Video)

 நாளாந்தம் எமது வாழ்க்கையில் நாங்கள் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொள்கின்றோம். அவற்றில் நல்லவையும் உண்டு, தீயவையும் உண்டு ஏன் அனைத்தையும் தாண்டி திகிலூட்டுவையும் உண்டு. சில சமயங்களில் மீள எண்ணிப் பார்க்க முடியாத அளவு அச்சத்தை ஏற்படுத்திய அனுபவங்களும் எம்முள் பலருக்கு இருக்கலாம். ஒரு சில சம்பவங்கள் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உலக வரலாற்றில் பதிந்தவையாகவும் இருக்கும். அப்படி ஒரு உண்மை சம்பவம் தொடர்பில் அறிய விரும்புகிறீர்களா? கேட்டதும் திகிலூட்டும் ஒரு உண்மை சம்பவத்தின் தொகுப்பு இதோ,  … Read more