கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் MATLAB மென்பொருளின் வளாக அளவிலான அனுமதிப்பத்திரத்தை செயல்படுத்துகிறது

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கற்கைக்கு உதவுவதற்கும், உயர்நிலை ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மேம்பட்ட உருவகப்படுத்துதல்களை மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் முழுமையான பயன்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமத்தை தனதாக்கியுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் இலங்கையின் முதலாவது உயர்கல்வி நிறுவனாக திகழ்வதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. MATLAB மென்பொருள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு சமிக்ஞைகள் செயலாக்கம், … Read more

இலங்கையின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி 27 வயதில் காலமானார்

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி குருப்பு தனது 27ம் வயதில் காலமானார். கடந்த 2020ம் ஆண்டு ஓஷதிக்கு புற்று நோய் ஏற்பட்டதுடன் இரண்டாண்டுகளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி 2015ம் ஆண்டில் இலங்கை தேசிய பூபந்து அணியின் சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்தார். கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் ஓஷதி பூபந்து போட்டியில் மகளிர் பிரிபில் … Read more

யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்புக்கு படையினர் உதவி

சுகதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கமைவாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது கஜபா படையணியின் படையினர் 30 ஜனவரி 2022 முதல் 2022 பெப்ரவரி 03 வரையான காலப்பகுதியில் யாழ். நகரப்குதியை உள்ளடக்கிய பகுதிகளில் பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு தொடர்பில் வழிப்புணர்வூட்டுவதற்கான பிரசாரங்களை மேற்கொண்டனர். இத்திட்டம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 512 வது பிரிகேட் தளபதி கேணல் தனூஜ … Read more

“என்னை நம்புங்கள்! வாக்குறுதியை நிறைவேற்றுவேன்’’ – கோரிக்கை விடுக்கும் கோட்டாபய

இலங்கையின் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சூழ்ச்சியால் அன்றி மக்களுக்கான பணிகள் ஊடாக முடிந்தால் அரசாங்கத்தை வீழ்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்த நிலையில், தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எதிர்வரும் மூன்று வருடங்களில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உறுதியளித்துள்ளார். ஆளும் பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரம் – சல்காது மைதானத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய … Read more

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு மத்தியிலும் வெற்றிகரமாக தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம்

சுகாதாரத் தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்பு கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, நாட்டில் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதுதொடர்பாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவிக்கையில் ,கொவிட் தொற்றைக்கண்டறிவதற்கானபரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான ‘ரெப்பிட் அன்ரிஜன்’ கருவிகளுக்கு எந்தவித … Read more

ஹிஜாஸ் உள்ளிட்ட பலர் விடுதலை! – கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள மதரசா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை கற்பித்தமை தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார். 18 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சட்ட மாஅதிபரால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட … Read more

தேசிய தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு மீண்டும் படையினரின் பங்களிப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலுக்கமைய இலங்கை இராணுவ வைத்திய படையினர் தேசிய தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்திற்கு பங்களிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் தடுப்பூசி வழங்கல் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கமைய அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்பின் கீழ் இயங்கும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவு, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 53 வது படைப்பிரிவு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள … Read more

தடையை நீக்குங்கள்! – இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக பல ஐரோப்பிய தயாரிப்புகள் இலங்கை சந்தைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை  சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி தடை … Read more

வீடு அற்றவர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

மாலபேயில் 256 வீட்டுத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் வீடற்ற நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான 5,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நடுத்தர குடும்பங்களுக்கான இந்த அடுக்குமாடி குடியிருப்பு மாலபே புதிய புபுது மைதானத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 20 மாடிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஜனவரி … Read more