அனர்த்த சூழ்நிலையில் உயிரிழந்த உயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் 

அனர்த்த சூழ்நிலையில் உயிரிழந்த உயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகையை ஒரு மில்லியனாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  கடந்த நாட்களில் இடம்பெற்ற அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை நிறைவு செய்யும் போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அனர்த்த முகாமைத்துவத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் … Read more

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர். சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், சாணக்கியன் ராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன்,கவீந்திரன் கோடீஸ்வரன், இளயதம்பி சிறிநாத்,துரைராசா ரவிகரன் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

இனவாதம் தலை தூக்குவதற்கு எவ்விதத்திலும் இடமளியோம் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

இனவாதம் தலை தூக்குவதற்கு எவ்விதத்திலும் இடமளிப்பதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து, புதிய சட்டம் கொண்டு வரப்படும் அல்லது அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கைதுகள் மற்றும் அதன் பின்னணியிலான காரணங்கள் தொடர்பாக இன்று (04) பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை வெளியிட்டார். இந்த நாடு மீண்டும், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்காக மிகவும் … Read more

அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது

கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.  அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 வரை மற்றும் இன்று மு.ப. 9.30 முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டு நாள் விவாதமாக இடம்பெற்றது.         … Read more

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று (04) ஆரம்பம்

அசாதாரண காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 2024 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இன்றிலிருந்து (04) டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு இணங்க பரீட்சைகள் நடைபெறும். பரீட்சைகள் இடம்பெறாத தினங்களுக்காக டிசம்பர் 21ஆம் திகதி மற்றும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் … Read more

ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

உலகவங்கிஅரசாங்கத்தின்Clean Sri Lanka திட்டத்துக்கு உதவியளிப்பதாக உறுதி அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்தார். உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் … Read more

பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – நீதி அமைச்சர்

பேச்சு சுதந்திரம் அவசியமானது என்றும், அரசாங்கம் அதனை உறுதிப்படுத்துவதற்கு எப்பொழுதும் செயற்படும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதியினால் கடந்த நவம்பர் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் மற்றும் நாட்டின் வளங்களை அழித்த ஊழல்வாதிகளுக்குத் … Read more

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் தெரிவு

பொதுமக்களின் வாக்குகளால் கணிசமான சதவீத பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சிறந்த வெற்றியாகும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு இந்நாட்டிலுள்ள சகல பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு – ஒன்றியத்தின் தலைவர் தெரிவிப்பு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், … Read more

அடுத்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மூன்று மில்லியனாக அதிகரிக்கத் திட்டம்

அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடணத்தின் மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், இதன் மூலம் ஐந்து பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். எதிர்காலத்தில், Nation Branding campaign என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் … Read more

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகம், ஊடகக் கற்கைகள் பீடமாக மாற்றம்

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை ஊடகக் கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த வர்த்தமாணி அறிவித்தல் பின்வருமாறு..