இலங்கையில் இன்று அறிக்கையிடப்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1253
இலங்கையில் இன்று அறிக்கையிடப்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1253
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில் இன்று அறிக்கையிடப்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1253
நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். 20 – 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 7 லட்சத்து 19,000 பேர் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 30 – 60 வயதுக்கிடைப்பட்டவர்களில் 03 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை … Read more
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (08) முற்பகல், ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிடெயாக்கி (Mizukosi Hideaki) அவர்களினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம், இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. லேண்ட் குரூஸர் ரக வாகனங்கள் 28, ப்ராடோ வாகனமொன்று, … Read more
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (08) முற்பகல், ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிடெயாக்கி (Mizukosi Hideaki) அவர்களினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. லேண்ட் குரூஸர் ரக வாகனங்கள் 28, ப்ராடோ வாகனமொன்று, … Read more
இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல. இவ்வாறான சம்வங்கள் இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் ஒரு நிகழ்வுவாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். உணர்ச்சி வசப்படும் மக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்காது இதுதொடர்பான விடயங்களை வெளியிடும் போது விசேடமாக தமிழ் ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய மீனவர்களின் வள்ளங்களை இலங்கையில் ஏலம் விட இருப்பதாக வெளியான செய்தி தொடர்பில் … Read more
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடை சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் காண்பிக்கும் வலுவான பங்களிப்பை வரவேற்க வேண்டுமே தவிர, அதுகுறித்து எதிர்ப்பை வெளிக்காட்ட கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற … Read more
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர் பிரச்சினையைக் கண்டும் காணாமலும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரட்னம் இதனைக் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார். இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு, Source link
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதற்காக விசேட பிரச்சார நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டிகளை … Read more
இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடத்தப்பட்டால் அது சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும். தேர்தல் நடத்துவது குறித்து உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல், வாக்குச் சாவடிகள் நிறுவுதல் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் சட்டங்களை அமுல்படுத்துவது குறித்து பொலிஸ் … Read more