மத்திய மாகாணத்தில் 38 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி
மத்திய மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக அந்த மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாகாணத்தில் இதுவரை 38 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இதுவரை 38 இலட்சத்து 85 ஆயிரத்து 685 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.