யாழ் மாவட்டத்தில் காலை 10.00 மணி வரை 16℅ வீதம் வாக்களிப்பு

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று(14) வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள்  சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில்  மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில்  காலை 10.00 மணிவரை 21.52 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை … Read more

இலங்கை விமானப்படை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை விமானப்படையின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் (AFESA) செயற்குழு பிரதிநிதிகள் இன்று (நவம்பர் 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சந்தித்தனர். AFESA சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எல்மோ பெரேரா (ஓய்வு) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவில் எயார் கொமடோர் அமல் விமலரத்ன (ஓய்வு), பிலைட் லெப்டினன்ட் சுசத் ராஜபக்ஷ (ஓய்வு) மற்றும் முன்னாள் வாரண்ட் அதிகாரி டி.எம். சரத் குமார ஆகியோர் அடங்குவர். பாதுகாப்புச் செயலாளர் … Read more

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை நிழற்படமெடுப்பதை / வீடியோ செய்வதை சமூக ஊடக வலைதளங்களின் ஊடாக வெளியிடுவதைத் தடுத்தல்

தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல்/வீடியோ செய்தல் அல்லது சமூக ஊடக வலைதளங்களின் ஊடாக வெளியிடுதல் என்பன தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனவே, அத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைதள கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

2024ஆம் ஆண்டு பாராhளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் இன்று (13ஆம் திகதி) சில அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன் கருத்துக்களை வெளியிட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம் இவ்வாறான கருத்துக்களுக்கு எவ்வித விளம்பரமும் வழங்க வேண்டாம் என்பதுடன், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்களை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்குமாறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அனைத்து தரப்பினரையும் … Read more

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கான பிரவேசம்

– வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் சம்பந்தப்பட்ட தூதரகங்களின் ஊடாக. – குவைத், ஜப்பான், கட்டார் தூதரங்கள்,அவுஸ்திரேலியா மெல்பேர்ன், கனடா டொராண்டோ, இத்தாலியின் மிலான்,டுபாய், கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் ஊடாக இந்த முன்னோடித் திட்டம் முன்னெடுப்பு. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு … Read more

அறுகம்பே பிரதேசத்திற்கான சுற்றுலா பயணத் தடை நீக்கம்

அறுகம்பே பிரதேசத்திற்கான சுற்றுலா பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. அறுகம்பே பிரதேசம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுலா பயணத் தடை நீக்கப்பட்டுளளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.  

பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கும்..

பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விடுக்கும் செய்தி  

உடல் வலிமையிழப்பிற்கு உட்பட்டவர்கள் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கல்

பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் தினத்தன்று உடல் வலிமையிழப்பிற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு எவ்வித இடையர்களும் இன்றி தமது வாக்கை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வசதிகள் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..    

தனியார் துறை ஊழியர்கள் தமது வாக்கினைப் பயன்படுத்துவதற்கு சொந்த விடுமுறை மற்றும் சம்பள இழப்பீடின்றி விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கவும்..

தனியார் துறை ஊழியர்கள் தமது வாக்கினைப் பயன்படுத்துவதற்கு சொந்த விடுமுறை மற்றும் சம்பள இழப்பீடின்றி விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் துறையைச் சேர்ந்த சகல தொழில் தருணர்களுக்கும், நீதி பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவலகங்கள் மாகாண சபைகள் உள்ளுராட்சி மற்றும் தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது வாக்குகளை பயன்படுத்துவதற்கு தங்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல உதவும் வகையில் அவர்கள் தொழில் புரியும் இடத்திலிருந்து அவர்களது வாக்களிக்கும் … Read more

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்கல்

அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தேர்தலின் போது சம்பளம் மற்றும் சொந்த விடுமுறைகள் என்பவற்றை இழக்காமல் தத்தமது வாக்குகளை அளிப்பதற்கு விடுமுறை வழங்கல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…