வைப்பு பணம் செலுத்துதல் மற்றும் பெயர் குறித்த நியமனங்களை சமர்ப்பித்தல்
2024 பாராளுமன்றத் தேர்தலில் வைப்பு பணம் செலுத்துதல் மற்றும் பெயர் குறித்த நியமனங்களை சமர்ப்பித்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு..
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
2024 பாராளுமன்றத் தேர்தலில் வைப்பு பணம் செலுத்துதல் மற்றும் பெயர் குறித்த நியமனங்களை சமர்ப்பித்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு..
2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட பெயர் குறித்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..
இலங்கை கடற்படையினர் திருகோணமலை அரிசிமலை கடற்பகுதியில் கடந்த 09 ஆம் திகதி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் (01), ஒரு மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றினர். இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2024 ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி, பகலில், கிழக்கு கடற்படை … Read more
அரச நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பணிகளின் போது பிரதமரின்/ அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பார்வைக்கு இணங்க, பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகவே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறே, ஏற்பாடு செய்யப்படும் எந்த ஒரு நிகழ்வுகளின் நினைவுச் சின்னங்கள், நினைவுப் … Read more
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை … Read more
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் … Read more
2024.10.10 தினத்தில் அமையப்பெற்ற உலக மனநல சுகாதார தினத்தை முன்னிட்டு இலங்கை மனநல சுகாதார சேவையாளர்களின் செயற்பாட்டு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் சுனில் கீர்த்தி நாணயக்காரவினால் பிரதமருக்கு வண்ணத்துப்பூச்சி உருவம் பொறிக்கப்பட்ட சின்னமொன்று அணிவிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மனநல சுகாதார சேவையாளர்களின் செயற்பாட்டு அமைப்பானது, மனநல சுகாரத்திற்கென முன்னின்று செயற்படுவதுடன் மனிதர்கள் உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் போது அவற்றிற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பிலான வழிகாட்டல்களையும் வழங்குகின்றது. 2013ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் … Read more
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது. பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கும் சர்வதேச … Read more
2024 உலக மனநல தினம், பணியிடத்தின் பௌதீக சூழல் நிலைமை, மன அழுத்த மேலாண்மை செய்தல் முதல் செயல்படுத்தல் மற்றும் சமூகதிற்கு இயைவாக்குதல் வரையான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பணியிடத்தில் மனநலத்திற்கு முதலிடம் கொடுப்போம் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள். மன ஆரோக்கியத்திற்கும் பணியிடத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஆரோக்கியமான பணியாளர்கள் கூட மோசமான பணிச்சூழலில் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பணியாளர்கள் உணர்ந்து மனநலத்தில் கவனம் செலுத்தினால், அது ஊழியர்களின் மன … Read more
இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் 9 ஆம் திகதி பொரளை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ஆறு இலட்சம் (600,000) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வாகனத்தை (01) கைது செய்தனர். அதன்படி, இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த விசேட தகவலின் பிரகாரம், கடற்படையினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, 2024 ஒக்டோபர் … Read more