இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவிக்காலம் ஆரம்பிக்கும் தருவாயில் இந்நாட்டுக்கு வருகைத்தர கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.   இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இந்திய – இலங்கை உறவுகளை பல்வேறு துறைகளூடாக பலப்படுத்திக்கொள்வது குறித்தும் … Read more

பாளுமன்றத் தேர்தல் – 2024 : வைப்புத்தொகை மற்றும் வேட்புமனு தாக்கல்

பாளுமன்றத் தேர்தலுக்காக 2024.10.04ஆம் திகதி வரை வைப்புத்தொகை மற்றும் வேட்புமனு தாக்கல் சையப்பட்டுள்ள விபரம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக் குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை…

ஜனாதிபதி தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்டிலிருந்து பணிகளை மீளத் தொடர அனுமதி..

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமுல்படுத்த உத்தியசிக்கப்பட்டிருந்த சில நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணமளித்தல் போன்ற விடயங்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதி முடிவடைந்திருப்பதனால், அத்தகைய நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்துட்டங்கள் மற்றும் மக்களுக்கு நிவாரணமளித்தல் போன்ற பணிகளை மீளத் தொடர தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

பாதுகாப்பு படை பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பு

புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர். இதன்போது நினைவுச் … Read more

விவசாயத் துறையில் தொழில் வாய்ப்பு நிமித்தம் 2,330 இலங்கையர்கள்; இஸ்ரேல் பயணம்…

இலங்கை அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் விவசாயயத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கமைய, இதுவரையிலும் 2,330 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில்புரிவதற்காகச் சென்றுள்ளனர். இதேவேளை, விவசாயத் துறையில் தொழில்வாய்ப்புக்கு தகுதி பெற்ற மேலும் 118 இலங்கையர்களுக்கு அண்மையில் (02) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் விமானப் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இவர்கள் ஒக்டோபர் மாதம் 9, 10, 12 மற்றும் 13 ஆகிய … Read more

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதிக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா (Azusa Kubota) நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது. இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் … Read more

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டாரஸின் வாழ்த்துச் செய்தியை ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பண்பான தன்மைக்கும் வாழ்த்து தெரிவித்த இணைப்பாளர் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வரவேற்றார். மக்கள் எதிர்பார்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதால் எதிர்வரும் காலம் சவாலானதாக … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களான பேராசிரியர் அனில் ஜயந்த மற்றும் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட … Read more

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின்  அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திப் … Read more

ஜனாதிபதி செயலாளருக்கும் கேட்ஸ் மன்ற சுயாதீன ஆலோசகருக்கும் இடையில் சந்திப்பு

கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். சிறுதேயிலை உரிமையாளர்களை இலக்கு வைத்து செயற்படுத்தப்படும் டிஜிட்டல் விவசாய பரிமாற்ற திட்ட முன்னேற்றம் மற்றும் இலங்கையில் போஷாக்கின்மை நெருக்கடிக்கு எதிர்கொள்வதற்காக திட்டமிட்டுள்ள பாடசாலை உணவு வழங்கல் திட்டம் என்பன குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதி, கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான … Read more