உடல் வலிமையிழப்பிற்கு உட்பட்டவர்கள் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கள்

பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் தினத்தன்று உடல் வலிமையிழப்பிற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு எவ்வித இடையர்களும் இன்றி தமது வாக்கை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வசதிகள் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..    

சமூக ஊடகங்களின் ஊடாக தேர்தல் பிரச்சார செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

தேர்தல் பிரச்சார அமைதிக் காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் மற்றும் குறுஞ் செய்தி சேவை (SMS) ஊடாக தேர்தல் பிரச்சார செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது என்றும் அது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார். தேர்தல் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டுக் கண்காணிப்பு மத்திய நிலையத்தில் சமூக ஊடகங்களின் … Read more

இன்று (13) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை

• சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமானஓரளவு பலத்த மழைவீழ்ச்சி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 13ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அதன் தாக்கம் காரணமாக இன்று (நவம்பர் 13) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் … Read more

பாராளுமன்றத் தேர்தலுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

2024 பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 2024 பொதுத் தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார். இம்முறை தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 6,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவசியமாயின் சேவையில் … Read more

தேர்தல் கடமைகளுக்காக நியமனம் கிடைக்கப்பெற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்

தேர்தல் கடமைகளுக்காக நியமனம் பெற்றுள்ள சகல அதிகாரிகளும் தமது நியமனத்தை மாற்றுவதற்கு அல்லது இரத்துச்செய்வதற்கு முடியாது என்றும், தேர்தல் பணிகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடக கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். ஏனெனில், தேர்தல் கடமைகளுக்காக நியமனம் பெற்றுள்ள சகல அதிகாரிகளும் தமக்கு … Read more

உங்களின் பெறுமதியான வாக்கை சரியான முறையில் எவ்வாறு அளிப்பது?

வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளைப் பயன்படுத்துதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க விளக்கமளித்துள்ளார். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டுக்கள் இரண்டு முறையில் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் .ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். வாக்காளர் ஒரு … Read more

வாக்களிக்க வரும்போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேவைப்பாடு 

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக தமக்குரிய வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் போது, பின்வரும் ஆளடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச்செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ள அமைதி காலப்பகுதி

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு (48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது 2024.11.11 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் முடிவுறுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:  

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘INS வேலா’ கொழும்பு வருகை

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான INS வேலா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் (SLN) கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றனர் என்று கடற்படை ஊடகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.  67.5 மீட்டர் நீளமுள்ள INS வேலா நீர்மூழ்கிக் கப்பல் 53 பணியாளர்கள் கொண்ட குழுவினால் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

மதுபான விற்பனை நிலையங்கள் 02 நாட்களுக்கு மூடப்படும்

2024.11.14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு பூராவும் உள்ள கலால் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களும் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்பட வேண்டும் என்று இலங்கை மது வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட (03 stars) 3 நட்சத்திர வகைப் பிரிவுக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும், மதுபானங்களை விற்பனை … Read more