நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின்  அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திப் … Read more

ஜனாதிபதி செயலாளருக்கும் கேட்ஸ் மன்ற சுயாதீன ஆலோசகருக்கும் இடையில் சந்திப்பு

கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். சிறுதேயிலை உரிமையாளர்களை இலக்கு வைத்து செயற்படுத்தப்படும் டிஜிட்டல் விவசாய பரிமாற்ற திட்ட முன்னேற்றம் மற்றும் இலங்கையில் போஷாக்கின்மை நெருக்கடிக்கு எதிர்கொள்வதற்காக திட்டமிட்டுள்ள பாடசாலை உணவு வழங்கல் திட்டம் என்பன குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதி, கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான … Read more

பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நாடளாவிய ரீதியில் திட்டம்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதேச செயலக மட்டத்தில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்கள் இப்பணியில் ஈடுபட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அந்தப் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறாயினும், … Read more

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதாக கேட்ஸ் மன்றம் உறுதி

கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். கேட்ஸ் மன்றத்தினால் இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய மேம்படுத்துதல்,பாடசாலை மதிய உணவு வழங்குதல் உள்ளிட்ட குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துதல், அரச மற்றும் தனியார் துறைகளில் மனித வளங்களை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றம் போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. புதிய அரசாங்கத்தின் … Read more

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தனர்

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தனர். கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (ஒக்டோபர் 02) இந்த சந்திப்பு இடம்பெற்றது. வெவ்வேறு சந்தர்பங்களில் தனித்தனியாக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் … Read more

வினைத்திறன்மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்க அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக நாம் பக்கபலமாக இருப்போம்

சம்பிரதாய அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது – விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று நேற்று (02) இலங்கைக்கு விஜயம் செய்தது. IMF திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையை பெறுவது பற்றி ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இதன்படி, IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் புதிய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொருளாதாரக் … Read more

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் – 2024.10.26 : எல்பிடிய பிரதேச சபை

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் – 2024.10.26 : எல்பிடிய பிரதேச சபை சட்ட ரீதியான அறிவித்தல்களை வெளியிடுதல் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு அடையாளமிடுவதற்கான திகதி தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடப்பட்டுள்ளது.

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசின் முழு ஆதரவு

-எமது நாட்டு இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார்.   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.   இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது … Read more