இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த  17 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் நேற்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த மீனவர்கள் பயணித்த இரு படகுகளும் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.  நெடுந்தீவு கடற்பரப்பின் தென் பகுதிக்கும் தலைமன்னார் கடற்பரப்பின் வட பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 413 இந்திய மீனவர்கள் … Read more

OTP எண்ணை யாருடனும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாருடனும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர். அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 பேர் கைது!

இலங்கை கடற்படையினர் நேற்று (29) காலை மன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீன்பிடி படகுகள் உட்பட 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிப் படகுகுள்;; மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) … Read more

பாராளுமன்றத் தேர்தல் -2024 : அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ளவர்களுக்கான அறிவித்தல்…

2024 பாராளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும் அனைத்து அஞ்சல் வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…        

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2024 : தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கான தீர்வு

2024 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கை பின்வருமாறு..

சாதாரண தரப் பரீட்சை பெறுகள் வெளியானது

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, அனைத்து அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரீட்சைப் பெறுபேறுகளின் அச்சிடப்பட்ட நகலை பெற்றுக்கொள்ளும் வசதிகள் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 29ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

விளையாட்டு அமைச்சினால் செலவிடப்பட்ட ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் குறித்து துரித கணக்காய்வினை மேற்கொள்ள வேண்டும்.

விழாக்கள் நடத்துவதற்காக தேவையற்ற பணம் மற்றும் பொது வளங்களை வீணடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். விளையாட்டுத் துறையில் துஷ்பிரயோகங்களைத் தடுக்க அவசர வேலைத்திட்டம் ஒன்று தேவை. அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல்களை கண்டறிய விசேட குழு விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் உரிய கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பில் உடனடியாக உள்ளக கணக்காய்வொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய … Read more

புதிய அமைச்சுகளின் விடயப்பரப்பு மற்றும் நிறுவனங்கள் வர்த்தமானியில் வௌியீடு

புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புக்களை வேறுபடுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி அறிவிப்பு நேற்று (27) வௌியிடப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 44 உறுப்புரையின் (1) இலக்க உப பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது.    

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

சில இடங்களில் 100 மி.மீ அளவான பல மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  செப்டம்பர் 28ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில … Read more