இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்கள்..

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக செனேஷ் பண்டாரவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக உதித கயேஷான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  புதிய தலைவர்கள் இன்று (25) காலை ஊடக அமைச்சில் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் இருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.   

2024 பாராளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிக்கை..

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மாவட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனு மூலம் முன்மொழியப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, பெயர் குறித்த நியமன பத்திரத்தின் ஊடாக பெயர் குறித்து நியமிக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை, மற்றும் சுயேட்சை குழுக்களினால் வைப்புச் செய்ய வேண்டிய பணம் பற்றிய விபரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஆனைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..

முட்டை விலை குறைவடைந்ததன் நன்மையை நுகர்வோர் அனுபவிக்க வேண்டும் – பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபை

சந்தையில் முட்டையின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், முட்டையின் விலை ரூ.28/-ரூ.35/ என்ற அளவில் இருப்பதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. முட்டை விலை குறைவடைந்ததன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் இன்று பாவனையாளர் அலுவலக அதிகார சபை வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளது. இவ்வாறு முட்டை விலை குறைவடைந்ததை தொடர்ந்து ,முட்டையடன் தொடர்பான பொருட்களின் விலையும் குறைவடைய வேண்டும் எனறும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பேக்கரி … Read more

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை…

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு செப்டம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1.00 மணி முதல் 30 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஹாரிஸ்பத்து, பூஜாபிட்டிய, பாததும்பர மற்றும் அக்குரணை ஆகிய நீர் நீர் வழங்கல் அமைப்புகளுக்கு … Read more

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இலங்கையின் பங்காளியாக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் பரஸ்பரத்துடனான சாதகமான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு பூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார … Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10.00மணிவரை 22.53℅ சதவீதம் வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 10.00 மணிவரை 22.53%வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.

அதிகாரபூர்வ அடையாள அட்டைகளை, ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும்

ஊரடங்குச் சட்டம்; பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், பயணங்களை மேற்கொள்வதற்கு பொலிஸ் நிலையங்களின் ஊடாக ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்கள் வெளியடப்பட மாட்டாது என்று இலங்கை பெலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அதிதியாவசிய, மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும்போது தமது அதிகாரபூர்வ அடையாள அட்டைகளை, ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது தபால் வாக்கு முடிவு வெளியாகியுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தபால் வாக்கு முடிவு வெளியாகியுள்ளது அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவு வெளியாகியுள்ளது. இம்முறை அளிக்கப்பட்டுள்ள மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 712,318 ஆகும்.

நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்!

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கத்தின் 2402/23 இற்கு அமைய, இன்று (21) இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 06.00 மணி வரை நாடுபூராகவும் மற்றும் உள்ளூர் கடற்பரப்பிற்கு உட்பட்டு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்..

திருகோணமலை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி சில நிமிடங்களுக்கு முன்னர் திருகோணமலையில் ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 5 மற்றும் 6 ஆம் திகதிகள் வரை இடம்பெற்றது. மேலும், இந்த நாட்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் … Read more