கம்பஹா மாவட்டம் 2024 ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார்

  கம்பஹா மாவட்டத்தில் 18 இலட்சத்து 81ஆயிரத்து 129 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்,  1,212 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஆகியவற்றுடன்  2024 ஜனாதிபதி தேர்தலுக்கான  சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான  வலிந்த கமகே தெரிவித்தார்.   ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று (16) இடம்பெற்ற ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.   வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக வெயங்கொட, பத்தல கெதர சியன கல்விக் கல்லூரி … Read more

பொலிஸாரின் பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்

  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக கடந்த கால நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட வீடியோக்களை மீண்டும் சமூக ஊடகங்களில் ஒலிபரப்புதல் மற்றும் அவ்வாறான வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என  இலங்கை பொலீஸார் ஊடகங்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.    நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு காலப்பகுதிகளில் இடம் பெற்ற சம்பவங்களுடன் தொடர்பான வீடியோக் காட்சிகளை ஊடகங்களில் இந்த நாட்களில் அடிக்கடி ஒளிபரப்பு செய்யும் சந்தர்ப்பத்தை காணக் … Read more

பல்கலைக்கழக பணியாற்குழுவினருக்கும் மாணவர்களுக்கும் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்கல்…

பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகு படுத்தும் வகையில் லீவு வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:    

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு..

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் முடிவடைந்தமை பற்றிய அறிவிதல் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் முடிவடைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் முடிவடைந்தமை பற்றிய அறிவிதல் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

வாக்கெண்ணும் நிலையமான யாழ் மத்திய கல்லூரியில் முன்னாயத்த களஆய்வு

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக  வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும்  ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்  நேற்று (16)கள ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. இக் கள ஆய்வில்   மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு  தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை … Read more

மன்னார் மாவட்ட தேர்தல் கள நிலவரம் – அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் -தேர்தல் குறித்து 20 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்ட.டிருப்பாதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கனக சபாபதி கனகேஸ்வரன் .தெரிவித்துள்ளார் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் 21ஆம் திகதி இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான சகல ஏற்பாடுகளும் … Read more

மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் மீலாதுன் நபி தினத்தை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்துடன் இலங்கை முஸ்லிம்கள் சகோதரத்துவத்துடன் கொண்டாடுகின்றனர். மற்றவர்களிடையே நம்பிக்கையை வளர்த்த முஹம்மது நபியவர்கள், அல்-அமீன் என்று (நம்பிக்கையானவர்) அழைக்கப்பட்டார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த நற்பண்புகளுக்காகவும் மனித நேயத்திற்காகவும் செய்த தியாகங்கள் அளவிட முடியாதவை. பரஸ்பர புரிதல், நேர்மை, நல்லிணக்கம் மற்றும் மற்றவர்களை வெறுத்து ஒதுக்காதிருத்தல் போன்றவை இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் அடிப்படை போதனைகளின் மையக்கருவாக … Read more

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை

சிரமங்களுக்கு மத்தியில் செய்த சாதனைகளைப் பாதுகாப்பது முக்கியம் – சர்வதேச நாணய நிதியம் இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் என்றும் குறிப்பிடும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack), அதனை எதிர்வரும் தேர்தலில் இலங்கை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.   வரலாற்றில் ஏற்பட்டுள்ள … Read more

பெட் ஸ்கேனர் இயந்திரத்திற்கான  புளோரோடாக்சிகுளுக்கோஸ் (FDG) உற்பத்தியில்  முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் 

நாட்டில் புற்றுநோயாளர்களின் நோய்களை கண்டுபிடித்தல் மற்றும் அதனை கண்காணித்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் பெட் ஸ்கேனர்  இயந்திரத்திற்குத் தேவையான புளோரோடாக்சிகுளுக்கோஸ் (FDG) உற்பத்திக்கு அவசியமான முதலீடு மற்றும் வசதிகளை வழங்குவதற்காக நிலைபேறான செயற்பாட்டின் பின்னர், இலங்கை அணுசக்தி சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன ஒன்றிணைந்து  எக்ஸஸ் சர்வதேச நிறுவனத்துடனான ஒப்பந்தம்  ஒன்றில் நேற்று (14) கையெழுத்திடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அரசாங்க வைத்தியசாலைகளில் வாரத்துக்கு ஒரு தடவை பயன்படுத்தப்படும்  பெட் ஸ்கேனர் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால்  பெட் … Read more