பொருளாதார நெருக்கடியில் உள்ள கிராமப்புற முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் யாத்திரைக்கான வாய்ப்பை வழங்கவும் – அமைச்சரவை பேச்சாளர்

மேல் மாகாணத்திற்கு அப்பால் வெளி மாகாணங்களில் வசிக்கும் பொருளாதார நெருக்கடியில் உள்ள கிராமப்புற முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு ஹஜ் கோட்டாவைப் பெற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது என்று புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு … Read more

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் குறித்து ஆராயப்படும்

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், நியாயமான காரணங்களின்றி அந்த குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் … Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீன அரசின் உதவியுடன் 1,996 வீடுகள்..

மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1,996 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு சீன அரசு இணங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த 1,996 வீடுகளும், மூன்று கட்டங்களாக பல இடங்களில் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொரட்டுவயில் 575 , கொட்டாவயில் 108, தெமட்டகொடயில் 586, மஹரகமவில் … Read more

பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை – மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவர் ஜி. வீ. எச். கோத்தாபய

மில்கோ நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்பில் விரைவாக தீரமானங்களை எடுப்பதுடன், முடிந்தவரை விரைவில் பால் பண்ணையாளர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவுகளைக் கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான சக்தியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவர் ஜி. வீ. எச். கோத்தாபய தெரிவித்தார். மில்கோ நிறுவனத்தின் நிலைப்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அதன் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; மிகவும் சிக்கலான நிலைமையில் புதிய அரசாங்கத்தினால் இந்த நிறுவனத்தை மீண்டும் இலாபமீட்டும் … Read more

சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண  ஆளுநருடன் சந்திப்பு

சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் திரு.பேட்ரிக் டேனியல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண  ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேற்று (04.11.2024) சந்தித்து கலந்துரையாடினர்.  இதன்போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பான விபரங்கள் ஒளிபதிவு மூலம் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டதுடன்  வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்கான போக்குவரத்து வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாகவும். தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.  வடக்கு மாகாணத்தில் இருந்து உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி … Read more

2024 (2025) ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்களை 2024 நவம்பர் 05 ஆம் திகதி முதல் 2024 நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இரு தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள ஊடாக அறிக்கை பின்வருமாறு..

வட மாகாண  ஆளுநர் மற்றும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கிடையில் கலந்துரையாடல்

வடக்கு மாகாண  ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில்  நேற்று முன்தினம் 02.11.2024   இடம்பெற்றது.  இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.  … Read more

அஸ்வசும நலன்புரித்திட்ட பயனாளிகளைத் தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்ட பயனாளிகள் குறித்து விசாரணை நடத்தப்படும்

சமுர்த்திப் பயனாளர்களாகப் பயன்பெற்றுவருகின்ற, அஸ்வசும நலன்புரித்திட்ட நன்மைகளை இழந்த, ஆனால் உண்மையிலேயே பயனடைய வேண்டிய பெரும் எண்ணிக்கையிலானோர் இருப்பதாக, கிடைக்கப் பெற்ற தகவல்கள் மற்றும் கோரிக்கைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.  இது தொடர்பாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் சம்பந்தப்பட்ட அமைச்சு மேற்கொண்ட விசாரணைகளிலும் சிக்கல் நிலைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய … Read more

பாராளுமன்றத் தேர்தல் 2024 : அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தேர்தலின் போது விடுமுறை வழங்கல்..

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தேசிய தேர்தல்களின் போது, சம்பளம் மற்றும் சொந்த விடுமுறைகள் என்பவற்றை இழக்காமல் தத்தமது வாக்கினை அளிப்பதற்காக விடுமுறை வழங்குதல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..