பாராளுமன்றத் தேர்தல் 2024 : அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தேர்தலின் போது விடுமுறை வழங்கல்..

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தேசிய தேர்தல்களின் போது, சம்பளம் மற்றும் சொந்த விடுமுறைகள் என்பவற்றை இழக்காமல் தத்தமது வாக்கினை அளிப்பதற்காக விடுமுறை வழங்குதல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..

வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றமையால், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றமையால், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது … Read more

வெளிநாட்டு கடவுச்சீட்டு குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை..

கடவுச்சீட்டு கொள்வனவுக்காக டென்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ‘P’ வகையின் கீழான வெற்றுக் கடவுச்சீட்டுக்கள் 50,000 தற்போது நிணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், இந்தத் தொகைக்கு மேலதிகமாக நவம்பர் மாத இறுதியில் மேலும் 100,000 வெற்றுக் கடவுச்சீட்டுக்களும் டிசம்பர் மாதத்தில் மேலும் 150,000 கடவுச்சீட்டுக்களும் என 750,000 கடவுச்சீட்டுக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ளன. அதே நேரம் மேலும் வெற்றுக் கடவுச்சீட்டுத் … Read more

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் இரண்டாவது நாள் இன்று

இன்று (01) காலை முதல் அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்புகள் ஆரம்பமானதுடன் தமது வாக்குகளை அரசாங்க உத்தியோகத்தர்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர். இதேவேளை, நேற்று முன்தினம் (30) தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமானதுடன், மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தமது வாக்குகளை தபால் மூலம் அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்றும் (01) எதிர் வரும் 04ஆம் திகதி திங்கட்கிழமையும் முப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் பணியாற்றும் … Read more

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய..

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தின் அடிப்படை படியாக, கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் … Read more

மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி –  அச்சுவேலி பிரதான வீதி  இன்று முதல் பொதுமக்கள் பாவனைக்கு..

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை இன்று (01) திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை. இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி … Read more

UNFPA பிரதிநிதி மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi நேற்றைய பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஆண் பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கென நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் UNFPA அமைப்பின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிசெய்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் ஆண் பெண் சமத்துவம், மகளிரின் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை..

ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. நாட்டின் … Read more

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்த விழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும். இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான பாரபட்சங்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படல் என்பவற்றுக்கு எதிராகப் போராடுபவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம். அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. … Read more