கௌரவ அமைச்சர் விஜித ஹேரத்தின் தீபாவளி வாழ்த்துச் செய்தி 

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ஆன்மீகத்தில் அறியாமை என்னும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அநீதியின் மீது தர்மத்தை நிறுத்துவதும்,தீபாவளியின் பிராதன நோக்கமாகும். நரகாசூரன் எனும் கொடிய அரக்கனை திருமகள் துணையுடன் திருமால் அழித்த தினத்தை நினைவு கூறும் வகையில் இந்து சகோதர, சகோதரிகள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். தீமைக்கு எதிராக நன்மையும், அறியாமைக்கு எதிராக அறிவையும் நிலைநாட்டப்பட்ட நாளாக, தெய்வீக ஒளியைப் போற்றிக் கொண்டாடும் தீபத்திரு நாளாக, தமிழ் மக்கள் இவ்விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவதாக … Read more

இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர் 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாதகமான நிலைமை உருவாகி வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

இத்தாலிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் அவர்கள் நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இச்சந்திப்பில் இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மீள உறுதிப்படுத்தப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. இச்சந்திப்பில் இத்தாலியில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் குறிப்பாக பயிற்றப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கமுடியுமான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை … Read more

பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. ஜொனி சிம்ப்சன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தொழிலாளர் தரநிலைகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக உரையாடலை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்திருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிகள் மற்றும் பரஸ்பர … Read more

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை … Read more

ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை   ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. … Read more

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் ஆயுதப் படை வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் உப செயலாளர் கொஸ்வத்தவினால் இன்று (30) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.  பொப்பி மலர் விற்பனையில் கிடைக்கப்பெறும் வருமானம் ஓய்வுப்பெற்ற மற்றும் அங்கவீனமடைந்த இராணுவ அதிகாரிகளின் நலன்களுக்கென ஒதுக்கப்படுகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களின் போதும், … Read more

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (30) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 8.30 மணி அளவில் ஆரம்பமானது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினத்தை தொடர்ந்து ஏனைய அரச அலுவலகங்களில் நவம்பர் மாதம் (1) மற்றும் (04)ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் அன்றைய தினங்களில் வாக்களிப்பை … Read more

பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்த நடவடிக்கை

மின் கட்டணத்தை குறைக்க புதிய வேலைத்திட்டம் -இலங்கை வணிகச் சபை பிரிதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு எந்தவொரு கொடுப்பனவு மற்றும் சம்பளத்தையும் பெறாமல் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவத் தயாரென வணிகச் சபை பிரதிநிதிகள் தெரிவிப்பு எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான தலையீட்டினை அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் … Read more

நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் இதற்கு ஏற்றுமதியாளர்களின் முழுமையான பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம் – ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அதற்கு எமது நாட்டு ஏற்றுமதியாளர்களின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உயரதிகாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஏற்றுமதி வர்த்தகத்தை இலகுபடுத்துவதற்காக ஏனைய அரச நிறுவனங்களையும் இலங்கை சுங்கத்தையும் … Read more