iPhone 16 series அறிமுகத்தினால்… அதிரடியாய் குறைந்த iPhone 15 Series விலைகள்

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 தொடர் நேற்று அறிமுகம் ஆனது.  iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை அறிமுகமான உடனேயே, ஆப்பிள் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றின் விலை குறைந்து விட்டது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.15 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஐபோன் 14 … Read more

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

குபெர்டினோ: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோ நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் ‘It’s Glowtime’ நிகழ்வில் ஐபோன் 16 சீரிஸ் போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமாகி உள்ள இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் … Read more

iPhone 15 Vs iPhone 16… கேமிரா முதல் பேட்டரி வரை…. எகிறும் எதிர்பார்ப்புகள்

iPhone 16 vs iPhone 15: ஆப்பிள் இன்று தனது புதிய ஐபோனை இன்று அறிமுகப்படுத்த உள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த நிகழ்வு செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெறும். ஆப்பிள் புதிய ஐபோனுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் ஆப்பிள் வாட்ச் SE ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது.  எனினும் மற்ற அறிமுகங்களை விட அதிக கவனம் ஐபோன் 16 போன் மீது … Read more

அமேசனில் பண்டிகை கால சலுகை… எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி

Amazon Electronic Festive Sale 2024: இ-காமர்ஸ் தளமான அமேசானில், செப்டம்பர் 6 முதல், செப்டம்பர் 10 வரை, அதாவது நாளை வரை பண்டிகை கால சலுகையாக, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75 சதவீதம் வரை பம்பர் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ரூ.20,000 வரை உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.25,000 வரை … Read more

மாருதி ஹூண்டாய் கியா என இந்திய சந்தைக்குள் நுழைய காத்திருக்கும் மைக்ரோ எஸ்யூவிக்களின் பட்டியல்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்யூவி பிரிவில் போட்டி இன்னும் தீவிரமடைய உள்ளது, சில புதிய மாடல்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில், மாருதி, ஹூண்டாய் முதல் கியா வரை பல மைக்ரோ எஸ்யூவிகளும் அறிமுகமாகவிருக்கின்றன. இந்தியாவில் சப்-4 மீட்டர் SUV பிரிவு அதிகரித்து வரும் தேவை காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா பஞ்ச் (Tata Punch), ஹூண்டாய் எக்ஸ்டெர் (Hyundai Exter) மாருதி சுசூகி ஃப்ரொன்க்ஸ் Maruti Suzuki … Read more

உங்கள் வேலையை எளிதாக்கும்… சில முக்கிய Gmail அம்சங்கள்

தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் என்னும் பிரபலமான மின்னஞ்சல் சேவையில்,  உங்கள் வேலையை எளிதாக்கும் பல அம்சங்கள் உள்ளன.  கூகுளால் உருவாக்கப்பட்ட இந்த ஜிமெயில் சேவை மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியும். இதன் மூலம் முக்கியமான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிவதோடு, இது நம் அன்றாட தொழில் சார்ந்த பணிகள் பலவற்றை எளிதாக்கியுள்ளது.  பயனரின் பணியை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜிமெயிலின் சில அம்சங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். … Read more

போன் பேசும் போது… வாய்ஸ் கிளையரா இல்லையா… இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

பல நேரங்களில் செல்போன் அழைப்பில் பேசும்போது, மறு முனையில் இருப்பவர்கள் பேசுவது சரியாக கேட்காது. போன் அழைப்பின் போது, மறு முனையில் இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாத அளவிற்கு இரைச்சல் சத்தம் கேட்கலாம். இது யாருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை. இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படும் நிலையில் இந்தச் சிக்கலைச் சமாளிக்கக்கூடிய சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம். தொலைபேசியில் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் காரணமாக அழைப்பின் போது ஆடியோ தரம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். … Read more

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மீடியாடெக் டிமான்ஸிட்டி … Read more

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்படும் செய்திகளை அடையாளம் காணும் யூடியூப் தொழில்நுட்பம்!

YouTube இன் முகம் கண்டறிதல் மற்றும் செயற்கை-பாடல் கண்டறிதல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும். கிரியேட்டர்கள் தங்கள் உள்ளடக்கத்தை டீப்ஃபேக் (Deepfake) பிரசச்னையில் இருந்து பாதுகாக்க உதவும் கருவிகளை YouTube அறிவித்துள்ளது. ஒரு நபரின் குரல் அல்லது முகத்தைப் பயன்படுத்தி AI-உருவாக்கிய உள்ளடக்கத்தைக் கண்டறியும் புதிய கருவிகளை யூடியூப் அறிமுகம் செய்திருக்கிறது. AI-உருவாக்கிய முகம் அல்லது குரலைப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை அடையாளம் காண முகத்தைக் கண்டறியும் கருவி உதவும். இதேபோல், செயற்கை … Read more

BLDC Fan: மின்சாரத்தை அபரிமிதமாக சேமிக்கும் சூப்பர் ஃபேன்! மின்விசிறியில் இத்தனை விஷயங்களா?

Best Fans: எப்போதும் ஃபேன் ஓடிக் கொண்டிருந்தாலும், மின்சார செலவு குறைவாக இருக்க வேண்டுமானால், என்ன செய்யலாம் என்று யோசிப்பவரா நீங்கள்? மின்சாரத்தை சேமிக்க நல்ல வழி BLDC ஃபேன் தான். இந்த ஃபேன்கள், பிரஷ்லெஸ் DC விசிறிகள் ( brushless Direct current) ஆகும். பிரஷ்லெஸ் டைரக்ட் கரண்ட் (BLDC) மோட்டாரைப் பயன்படுத்தும் சீலிங் ஃபேன்கள் அவற்றின் ஆற்றல் சேமிப்பு, சத்தமில்லாத செயல்பாடு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றின் காரணமாக பிரபலமான மின்சார விசிறிகளாக மாறிவிட்டன. BLDC மின்விசிறி … Read more