மீட்புப் பணிகளுக்காக புதிய ட்ரோன் கண்டுபிடிப்பு! மழைவெள்ள மீட்பில் உதவும் புத்தாக்கம்

மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. எதிர்பாராதவிதமாய் ஏற்படுவது தான் இயற்கை பேரிடர் என்றாலும், அதற்கான தயார்நிலையில் இருப்பது அவசியமாகிறது. அந்த வகையில், இந்தியாவில் மழைக்காலத்தில் ஏற்படும் சிக்கல்களின்போது உயிரைக் காப்பாற்ற வடிவமைக்கப்பட்ட அதிநவீன ITUS வாட்டர் ட்ரோனை இந்திய மீட்பு அகாடமி வெளியிட்டுள்ளது. தற்போது வயநாட்டில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம், கேதார்நாத்தில் மேகவெடிப்பு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கைப் பேரிடர் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் வெளியாகியிருக்கும் … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..!

New FASTag Rules: இந்தியாவில் கார் வாங்குபவர்கள், பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதிலும் அனைத்து கார்களிலும் பாஸ்டேக் (Fastag) பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTag உடன் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  NPCI அமல்படுத்தியுள்ள புதிய விதிகள் ஃபாஸ்டாக் தொடர்பாக, புதிய விதிகளை NPCI அதாவது தேசிய பண பரிவர்த்தனை வாரியம்  செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள், இன்று முதல் அதாவது, ஆகஸ்ட் 1ம் … Read more

டெலிஃபோட்டோ லென்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்குடன் தூள் கிளப்பும் மோட்டோரோலா எட்ஜ் 50

மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குறைந்த மிட்ரேஞ்ச் பிரிவில் வருகிறது. எட்ஜ் 50 ஃப்யூஷனுக்கு மேலே உள்ள இந்த போன், 120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரை, பிரத்யேக டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய டிரிபிள் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரி கொண்டது. இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50  மோட்டோரோலா எட்ஜ் 50 தனி 8ஜிபி … Read more

நிலைகுலைந்த இந்திய வங்கிகள்! ஜூலை 31 சைபர் தாக்குதல் எதிரொலி! லேட்டஸ்ட் அப்டேட்!

நேற்று, புதன்கிழமை (ஜூலை 31) ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் கிட்டத்தட்ட 300 இந்திய உள்ளூர் வங்கிகளில் சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள சிறிய வங்கிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் நிறுவனமான சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் (C-Edge Technologies) மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India (SBI)) மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services (TCS)) ஆகிய … Read more

நத்திங் போன் (2a) பிளஸ் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் ‘போன் (2a) பிளஸ்’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த மார்ச் மாதம் நத்திங் போன் (2a) வெளியாகி இருந்தது. தற்போது அதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனாக போன் (2a) பிளஸ் வெளிவந்துள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து … Read more

இணையத்தில் டீப் ஃபேக்ஸ் போன்ற தவறான சித்தரிப்புகள் பரவுவதை தடுக்க மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: இணையதளத்தில் டீப் ஃபேக்ஸ் உள்ளிட்ட தவறான சித்தரிப்புகள் பரவாமல் தடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ள ஜிதின் பிரசாதா, “டீப் பேஃக்ஸ் உள்ளிட்ட தவறான சித்தரிப்புகளை தடுக்கும் வகையிலான பொதுமக்கள் மற்றும் அது சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் உள்ளீடுகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. … Read more

BSNL VS Jio Vs Vodafone… பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான் எது..!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையார்களை ஈர்க்க, பல திட்டங்களை அறிவித்து வருவகிறது. மேலும், மத்திய அரசும் தொழில்ட்ப மேம்பாடு மற்றும் வலுவான நெட்வொர்க் ஏற்படுத்த பட்ஜட்டில் அதிக நிதி ஒதுக்கியுள்ளது.  இந்நிலையில், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களின் ஒரு வருட காலத்திற்கான … Read more

797 ரூபாய்க்கு 300 நாள் ரீசார்ஜ் திட்டம்… அதிரடி காட்டும் பிஎஸ்என்எல்லின் மலிவு விலை திட்டம்!

தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியிருந்தாலும், பிஎஸ்என்எல்ரீசார்ஜ் திட்டங்களின் விலை குறைவாகவே இருக்கிறது. மலிவான கட்டணத் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. குறைந்த விலையில் 300 நாட்களுக்கு முழு வேலிடிட்டியை வழங்கும் BSNL இன் அத்தகைய சிறந்த திட்டம் ஒன்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிஎஸ்என்எல் நாட்டின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாக இருப்பதால், தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களை விலையை அதிகரித்தாலும், BSNL அதன் மலிவான கட்டணத் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. … Read more

ஹைட்ரஜனால் இயங்கும் டாக்ஸியில் பறக்கத் தயாரா? சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பறக்கும் டாக்ஸி!

பறக்கும் கார்கள் என்பது அனைவருக்கும் விருப்பமான விஷயம் ஆகும். நீண்ட காலமாக பறக்கும் கார்கள் பற்றி கற்பனை செய்தும் பேசியும் வருவதால், பறக்கும் கார் என்பது அறிவியல் புனைகதை உலகில் அதிகம் பேசப்படும் அம்சமாகவும் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவை நம் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் என்று மனிதர்கள் நம்புவது தான்.. இருப்பினும், இப்போது பறக்கும் கார்கள் தொடர்பான கண்டுபிடிப்பு மற்றும் வெற்றிகரமான சோதனைகள் என கற்பனைகள் நனவாகும் காலமும் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது, … Read more

ரியல்மீ முதல் போக்கோ வரை… ₹10,000-திற்கும் குறைவான விலையில் அசத்தல் போன்கள்..!!

Best Smartphones Under the Cost of Rs.10,000: செல்போன்கள் நம் வாழ்க்கையில், உணவு, உடைக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு அத்தியாவசிய பொருளாக ஆகி பல காலம் ஆகி விட்டது. தொலைதொடர்பு சாதன என்ற நிலை மாறி, ஸ்மார்ட்போன்கள் நம அனறாட வேலைகள் அனைத்திற்கும் தேவைப்படும் ஒரு பொருளாக ஆகி விட்டது. சந்தையில் சிறந்த அம்சங்கள் மற்றும் செயல்திறனுடன் பல  ஸ்மார்ட்போன்கள் உள்ளன, விற்பனைக்கு. ஆனால், பலவற்றின் விலை மிக அதிகம். ஆனால், கவலை வேண்டாம்… உங்கள் … Read more