உங்க மொபைலில் இருந்து பணத்தை திருடும் 35 Malware App, உடனே Uninstall பண்ணுங்க!

சமீபத்தில் தான் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நான்கு செயலிகள் இது போன்று இணைய குற்றங்களில் ஈடு பட்டதற்காக நீக்கப்பட்டது. இந்நிலையில் இணைய குற்றங்கள் புரியும் செயலிகளை கண்டறியும் cybersecurity நிபுணர் குழு ஒன்று சமீபத்தில் மேலும் 35 செயலிகள் நூதன முறையில் பயனாளர்களின் பணத்தை திருடுவதாக கண்டறிந்துள்ளனர். மில்லியன் கணக்கான பயனாளர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே பயனாளர்கள் கீழ்கண்ட செயலிகளை தங்கள் மொபைல் போன்களில் வைத்திருந்தால் உடனடியாக delete செய்ய … Read more

இந்தியாவின் முதல் மின்சார டபுள்-டெக்கர் பஸ்: அறிந்ததும் அறியாததும்

இந்தியாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்ற வண்ணம் உள்ளது. நிலம், நீர், ஆகாயம் என மக்களுக்கான போக்குவரத்து மேம்பட்டுக் கொண்டே வருகிறது. அதன் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது மும்பை மாநகர சாலைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் உலா வரவுள்ளது இந்த மின்சார டபுள்-டெக்கர் பேருந்து. இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த வகை பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பேருந்தின் பயணத்தை தொடங்கி வைத்துள்ளார். … Read more

உலகத்தின் ஸ்டைலையே மாற்றிய ஸ்மார்ட்போன் கேமராக்கள்: உலக புகைப்பட தினத்தில் ஒரு பார்வை!

இன்று உலக புகைப்பட தினம். நாம் வாழும் அழகான உலகை அப்படியே காட்சிகளாய் உறைய செய்து காலத்திற்கும் நிலைக்க செய்வது கேமராக்கள். டிஜிட்டல் யுகத்தில் அவை ஸ்மார்ட் போன்கள் வழியாக சுலபமாக நம் கைகளுக்குள் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் விரும்பிய வண்ணம் நம்மை அழகாக படம் எடுத்து தருகின்றன. இத்தகைய மாற்றம் வருவதற்கு முன்னாள் எப்படி இருந்திருக்கும். பெரிய பெரிய கேமராக்களை தூக்கி கொண்டு அலைந்து கொண்டிருந்தது உலகம். அதை மாற்றி ஒரு டிஜிட்டல் புரட்சியை செய்தன … Read more

5ஜி-யை அமல்படுத்த தயாராக இருங்கள் – தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தயாராக வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. 7 நாட்கள் நீடித்த ஏலம் ஆகஸ்ட் 1-ல் முடி வடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72,000 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் … Read more

ரியல்மி 9i | பட்ஜெட் விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி இந்தியா

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையிலான ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். விரைவில் இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான நிறுவனமான ரியல்மி இப்போது மலிவு விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய … Read more

இந்தியாவில் VLC மீடியா பிளேயருக்கு தடை: அரசு தெரிவித்துள்ளது என்ன?

இந்தியாவில் வீடியோ லேன் நிறுவனம் டெவெலப் செய்த VLC மீடியா பிளேயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் சார்பில் ஆர்டிஐ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அரசு தரப்பில் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன என்பது வீடியோ லேன் நிறுவனத்திற்கு தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித நோட்டீஸும் இல்லாமல் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

நிறம் மாறும் பேக் பேனல் உடன் விவோ V25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ V25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதன் பின்புறத்தில் உள்ள பேனல் நிறம் மாறும் தன்மையை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் … Read more

ஹேக் செய்யப்பட்ட1900 ‘சிக்னல்’ கணக்குகள்: தங்கள் கணக்கு பாதிக்கப்பட்டதா என்பதை பயனர்கள் அறிவது எப்படி?

‘சிக்னல் மெசேஞ்சர்’ தள சேவையை பயன்படுத்தி வரும் சுமார் 1900 பயனர்களின் மொபைல் எண்கள் மற்றும் SMS கோடுகள் அடங்கிய விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என சிக்னல் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் சிக்னல் தளத்தை பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்கள் கணக்கு இதில் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி என்பதை பார்ப்போம். சிக்னல் தளம் தனது பயனர்களின் மொபைல் எண்ணை சரிபார்க்க வேண்டிய தேவைக்காக ‘Twilio’ என்ற நிறுவனத்தின் சேவையை பெற்று வருகிறது. அதுதான் இதற்கு காரணம் … Read more

பிக்சல் போனில் 'ஆண்ட்ராய்டு 13' வெர்ஷனை வெளியிட்ட கூகுள்: விரைவில் அனைத்து போன்களிலும் அப்டேட்

பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து போன்களிலும் புதிய வெர்ஷனை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களால் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக் சாம்ராட்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் இந்த புதிய வெர்ஷனை மேம்பட்ட பிரைவசி பாதுகாப்புடன் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் லாங்குவேஜ் செட்டிங்ஸும் அடங்குமாம். இப்போதைக்கு இது பிக்சல் போன் பயனர்களுக்காக மட்டுமே ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது. … Read more

இந்தியா @ 75: டிஜிட்டல் இந்தியாவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும்

இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியின்போதுதான் தொலைத் தொடர்பு துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது. அஞ்சல், டெலிகிராப் என தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான துறைகளில் ஆங்கிலேயர்கள் கவனம் செலுத்தினர். அதில் பல்வேறு மாற்றங்களையும் அவர்கள் கொண்டு வந்தனர். அப்படி வளர்ந்த இந்திய தொலைத் தொடர்புத் துறை கடந்த 75 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு துறையாக மாறியிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை ஆக்கபூர்வமான மற்றும் முன்னோக்கிய பார்வை கொண்டதாகவே … Read more