Jio Recharge: ஜியோ ரீசார்ஜுக்கு அமேசான் பே வழங்கும் ரூ.200 தள்ளுபடி!

Jio 666 plan details 2022: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ப்ரீபெய்ட் திட்டங்களின் பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களை நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜியோவின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்போது இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.200 வரை சேமிக்க முடியும். மேலதிக செய்தி: உலகம் … Read more

Infinix: ஆகஸ்ட் 2 அன்று வெளியாகும் இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்!

Infinix Hot 12 Pro Flipkart: இன்பினிக்ஸ் புதிய போனை ஆகஸ்ட் 2 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் “இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ” வெளியீடு குறித்த மைக்ரோ தளத்தை பிளிப்கார்ட் திறந்துள்ளது. அதில் போனை குறித்த சில தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த போனை #ProMultitasker என்று குறிப்பிடுகிறது. இந்த போனில் இரண்டு கேமராக்கள், எச்டி+ டிஸ்ப்ளே, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, நீட்டிக்கக்கூடிய ரேம் அம்சம் போன்ற … Read more

TikTok: வருகிறது டிக்டாக் மியூசிக்; அழுத்தத்தை தாங்குமா ஸ்பாடிஃபை?

TikTok Music App: ஸ்பாடிஃபை மியூசிக் தளத்துடன் நேரடி போட்டியில் இறங்க டிக்டாக் தயாராகிவிட்டது. குறும் காணொளிகளை பகிரும் தளமாக வலம்வரும் டிக்டாக் பயன்பாட்டின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’, புதிதாக ‘டிக்டாக் மியூசிக்’ எனும் பெயரை பதிவு செய்துள்ளது. உலகளவில் அதிக பயனர்களை கொண்டிருக்கும் டிக்டாக் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, சந்தையில் உலாவி வரும் ஸ்பாடிஃபை, அமேசான் மியூசிக் போன்ற ஆடியோ ஸ்டிரீமிங் பயன்பாடுகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்டாக் மியூசிக் … Read more

Adani 5G: ஜியோ, ஏர்டெல்லை எதிர்கொள்ளுமா அதானி? 5ஜி ஏலம் சொல்வதென்ன?

5G Spectrum Auction: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமத்தின் நுழைவு யாராலும் எதிர்பார்க்கப்படவில்லை. இந்த ஏலத்தில் அதானியின் நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் பங்கேற்றது. அதானியின் நுழைவு பல விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக மற்றொரு புதிய நிறுவனம் வரலாம் என்று ஏற்கனவே யூகங்கள் இருந்தன. இருப்பினும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஸ்பெக்ட்ரம் உதவியுடன் ஒரு தனியார் நெட்வொர்க்கை உருவாக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலதிக செய்திகள்: WhatsApp Scam: வாட்ஸ்அப்பில் நிர்வாணமாக … Read more

Meta: லாபத்தை இழந்து தவிக்கும் பேஸ்புக்; சீன நிறுவனங்களால் சோகம்!

Meta Revenue: சமூக ஊடக உலகை ஒருதலைப்பட்சமாக பேஸ்புக் ஆளுகிறது. பேஸ்புக்கிற்கு போட்டியாக அவ்வப்போது பல நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைகின்றன. ஆனால், பேஸ்புக் தனக்கென ஒரு நிலைப்பாட்டை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. தற்போது இந்த செய்தி பேஸ்புக் பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தற்போது புதிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. இதனால் வேறு சில சமூக ஊடக நிறுவனங்களும் பேஸ்புக்கிற்கு கடும் போட்டியை கொடுக்க ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது. WhatsApp Scam: வாட்ஸ்அப்பில் நிர்வாணமாக அழைப்பவர்கள் யார்? … Read more

Play Store: கூகுள் நீக்கிய 17 செயலிகள்; உங்களிடம் இருந்தால் உடனடியாக அழித்துவிடவும்!

Google Play Store: நீங்கள் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூகுள் 17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இவைகள் போனில் இருந்து மக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடியுள்ளது தெரியவந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் உலகின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் இயக்க முறைமையாகும். இருப்பினும், தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு சிக்கல்கள் எப்போதும் இதில் காணப்படுகின்றன. டிசம்பர் 2021இல், 12 ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் … Read more

WhatsApp Scam: வாட்ஸ்அப்பில் நிர்வாணமாக அழைப்பவர்கள் யார்? நீங்களும் வலையில் வீழலாம்!

Latest WhatsApp scam: உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் மூலம் பல பயனர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவ்வப்போது நமக்கு தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் வரும். சில நேரங்களில் நாம் அத்தகைய அழைப்புகளை புறக்கணிப்போம். இருப்பினும், மீண்டும் மீண்டும் அத்தகைய அழைப்புகள் நமக்கு வரும்போது, இறுதியாக யார் தான் அழைக்கிறார்கள்? என்பதை அறிய நாம் சில நேரத்தில் அந்த அழைப்பை ஏற்போம். ஆனால் தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்புகள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். … Read more

BSNL Vs Jio: நீண்ட நாள் வேலிடிட்டி; எந்த நெட்வொர்க் திட்டம் சிறந்தது?

BSNL Vs Jio Long Validity Plans: டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட அற்புதமான திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. நிறுவனங்கள் 15 நாள்கள் முதல் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும் பல சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளன. நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஜியோவில் இதேபோன்ற ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, 336 நாள்கள் வேலிடிட்டியுடன் வரும் மிகவும் மலிவுத் திட்டத்தைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் இந்த திட்டம் … Read more

PUBG போல, BGMI கேமுக்கும் ஆப்பு! ஏன்… எதற்காக… விளையாட வழி இருக்கா?

BGMI Ban in India: கேமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் Battlegrounds Mobile India (BGMI), இனி கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store), ஆப்பிள் ஆப் ஸ்டோர் (App Store) ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாது. ஒன்றிய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொபைல் கேம் தடை என்பது இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பப்ஜி … Read more

Samsung Galaxy: ஃபோன வாங்குனா போதும்; பணத்த அப்புறமா கொடுங்க – களத்தில் இறங்கிய சாம்சங்!

Galaxy Unpacked: சாம்சங் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இப்போது, “Buy Now Pay Later” சேவையை அறிவித்துள்ளது. இந்த சேவை சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ், மடிக்கக்கூடிய Fold 3, Flip 3 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே நிறுவனம் வழங்குகிறது. கொரிய நிறுவனமான சாம்சங் அதன் வருடாந்திர Unpacked 2022 நிகழ்வை சில நாள்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 10 அன்று நடத்துகிறது. நிறுவனம் தனது முதன்மை மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்கிறது. 5G Auction: … Read more