Elon Musk: வெடித்து சிதறிய ராக்கெட் – SpaceX திட்டத்தில் பின்னடைவு! வைரலாகும் வீடியோ…

Elon Musk SpaceX: உலக செய்திகளில் எப்போதும் டாப் இடத்தில் இருப்பர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். இவரின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்றும் இயங்கிவருகிறது. அதில் தான் ஒரு சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ட்விட்டர் ஒப்பந்தம் காரணமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த எலான் மஸ்க், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அனைவரும் அதிர்ச்சியளித்தார். ஆனால், அவரது லட்சிய திட்டமான ஸ்பேஸ்-எக்ஸ் விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து வந்தார். இந்நிலையில், ஸ்பேஸ்-எக்ஸ் … Read more

விற்பனையை தொடங்கிய 108MP கேமரா கொண்ட Infinix Note 12 Pro 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

Infinix Note 12 Pro 5G Flipkart Sale: இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 ப்ரோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்திய டெக் சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் பல சிறப்பம்சங்கள் அடங்கிய, மிகவும் சக்திவாய்ந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி போனின் விற்பனை தொடங்கியுள்ளது. புதிய இன்பினிக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில், அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் புராசஸர், 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற … Read more

Telecom: ரூ.49 முதல் BSNL Recharge வழங்கும் 1ஜிபி டேட்டா திட்டங்கள்!

BSNL Recharge Offers Tamil Nadu: ஒன்றிய அரசில் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. எனவே, விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களை குறித்து இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். குறைந்த விலை பட்ஜெட் ரீசார்ஜ் திட்டங்களைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், பிஎஸ்என்எல்-இன் இந்த ரீசார்ஜ் திட்டங்களில் உங்கள் பணத்தை சேமிக்கலாம். இதன் மலிவான திட்டம் ரூ.49 முதல் தொடங்குகிறது. பிஎஸ்என்எல் ரூ.45 … Read more

டிஆர்டிஓ பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸுக்கு ஏபிஜே-2022 விருது

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் மற்றும் நிம்ஸ் மருத்துவ மையத்தின் ஏபிஜே-2022 விருது, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி மற்றும் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெஸ்ஸி தாமஸுக்கு வழங்கப்படுகிறது. தங்கள் துறையில் சிறப்பாக பணிபுரியும் அரசுத்துறை அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இவ்விருதை இந்நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஏபி.மஜித்கான் தலைமையிலான விருது தேர்வுக் குழுவால் நடப்பாண்டு விருதாளராக டெஸ்ஸி தாமஸ் தேர்வு … Read more

Apps: போலி வாட்ஸ்அப் செயலிகளால் ஆபத்து; எச்சரிக்கும் நிறுவனம்!

WhatsApp Users Alert: உடனடி செய்தி பகிரும் தளமான வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அலுவலர் வில் கேத்கார்ட் செயலியின் போலி பதிப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டில், செயலியின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்தும் பயனர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் செயலிகளில் ஒன்றாகும். இந்த பயன்பாட்டில் கிட்டத்தட்ட 2 பில்லியன் பயனர்கள் உலாவி வருகின்றனர். எனவே, இணைய குற்றவாளிகள் … Read more

ரூ.4,390 கோடி வரி ஏய்ப்பு செய்த சீன செல்போன் நிறுவனம் ஒப்போ: வருவாய் புலனாய்வு இயக்குநரக ஆய்வில் தகவல்

புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த ஒப்போ நிறுவனம் ரூ.4,390 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்தது வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 48 இடங்களில் வருவாய் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற் கொண்டனர். இதில், விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டில் உள்ள வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. குறிப்பாக, நஷ்டம் … Read more

ரூ.4,389 வரி ஏய்ப்பு செய்ததாக Oppo India மீது குற்றச்சாட்டு – தொடர்ந்து சிக்கும் சீன நிறுவனங்கள்!

Oppo Tax Issue in India: சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சியோமி, விவோ நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது ஓப்போ நிறுவனம் பண மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒப்போ நிறுவனம் ரூ.4,389 கோடி சுங்க வரியை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒப்போ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக DRI (வருவாய் புலனாய்வு இயக்குநரகம்) குற்றம் சாட்டியுள்ளது. ஒப்போ நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி, அசெம்பிளிங், மொத்த வர்த்தகம், மொபைல் விநியோகம் மற்றும் … Read more

மோட்டோரோலாவின் Moto G71 5G போனை தள்ளுபடி விலையில் வாங்க நல்வாய்ப்பு!

Moto G71 5G Offer Price in India: மோட்டோரோலா தனது மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனை சில நாள்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 33W வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், சக்திவாய்ந்த 5000mAh பேட்டரியுடன் இந்த போன் வருகிறது. மோட்டோ நிறுவனம் இந்த போனை ரூ.18,999க்கு அறிமுகப்படுத்தியது. இந்த போனை இப்போது மலிவாக வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் இந்த … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த 5 புகைப்படங்களையும் புரிந்துகொள்வது எப்படி? – ஒரு விளக்கம்

“எங்கோ, நம்பமுடியாத ஒன்று நாம் அறியக் காத்திருக்கிறது” – இது பிரபல வானியல் அறிஞரான கார்ல் சாகனின் வார்த்தைகள். இதனை குறிப்பிட்டுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த அரிய புகைப்படங்களை நாசா உலகுக்குப் பகிர்ந்தது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத பரந்து விரிந்திருக்கும் விண்வெளியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் நாம் அறிந்துகொள்ள என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம். SMACS 0723: விண்வெளியில் … Read more