ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களில் Netflix, Hotstar மற்றும் Prime Video என எண்ணில் அடங்கா நன்மைகள்!

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஜியோ தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இருப்பினும், நிறுவனம் சில சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் பயனர்களுக்கு பல வசதிகளுடன் OTT பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகின்றன. இந்த போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலை மிகவும் குறைவு என்பது கூடுதல் சிறப்பு. Netflix சந்தாவுடன் வரும் இந்தத் திட்டங்களின் விலை ரூ.1000க்கும் குறைவாகவே இருக்கும். Netflix, Disney+ Hotstar, Amazon Prime … Read more

ரஷ்யாவின் நாடாளுமன்ற யூடியூப் சேனல் முடக்கம் – கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அரசு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள முன்னணி டெக் நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. கடந்த வாரத்தில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Infosys ரஷ்யாவை விட்டு வெளியேறியது. அதேபோல, சிலிக்கான் வேலி நிறுவனங்கள் பல, ரஷ்யாவில் தாங்கள் மேற்கொண்டுவந்து தொழில்களை நிறுத்தியுள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், சமுக வலைத்தள நிறுவனமான மெட்டாவும் தங்களின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. இச்சூழலில், ரஷ்யாவின் நாடாளுமன்ற … Read more

ஐபோன் வாங்க சரியான நேரம் இது!

நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அதுவும் ஆப்பிள் ஐபோனை வாங்க விரும்பினால், உங்களுக்கான ஒரு சிறந்த ஆஃபர் இருப்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆப்பிள் ஐபோன் 12 , ஐபோன் 13 ஸ்மார்ட்போன்கள் iStore இல் பெரும் தள்ளுபடியில் கிடைக்கின்றன. இந்த தள்ளுபடி விற்பனையில் கூடுதலாக வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்களும், நல்ல எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படுகிறது. இங்கு பயனர்கள் வாங்கும் iPhone 12 போனில் ரூ.28,000 … Read more

Flipkart Sale: ரூ.18,000 மதிப்புள்ள Vivo போன் வெறும் 990 ரூபாய்க்கு கிடைச்சா வேண்டானா சொல்ல முடியும்!

பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் பிக் சேவிங் டேஸ் சேல் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இந்த சலுகை விற்பனை தினங்களில் பொருள்களை நல்ல தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இந்த நாள்களில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் என பல மின்னணு சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இதனிடையில், ஸ்மார்ட்போன்களை நீங்கள் எதிர்பார்த்திராத விலையில் எப்படி வாங்கலாம் என்று நாங்கள் உங்களிடம் கூற விரும்புகிறோம். விவோ நிறுவனத்தின் பிரபலமான … Read more

நாசிக்கில் தயாராகும் இ-பாஸ்போர்ட் – விரைவில் விநியோகம் தொடங்கும்!

தொழில்நுட்பத்தால் பல விஷயங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இப்போது எல்லாமே ‘ஸ்மார்ட்’ ஆகிவிட்டது. மேலும், தொழில்நுட்பம் பல விஷயங்களை மிகவும் எளிதாக்கி நேரத்தை மிச்சப்படுத்துகிறது. டெக் துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து மக்களுக்கு மேலும் எளிதாக அணுகக்கூடிய வகையில் வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு பதிலாக இ-பாஸ்போர்ட் அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் நாடாளுமன்றத்தில் இதை தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்க … Read more

சியோமி தயாரிப்புகளை வாங்க இதைவிட சரியான நேரம் கிடைக்காது!

இந்தியாவில் நம்பகத்தன்மை பெற்ற சினாவின் சியோமி நிறுவனம், தனது தயாரிப்புகளுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. Xiaomi Mi Fan Festival 2022 என்றழைக்கப்படும் இந்த விற்பனைத் திருவிழாவில் சியோமி, ரெட்மி, மி ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கேட்ஜெட்டுகளுக்கு சிறந்த தள்ளுபடி கிடைக்கிறது. ஏப்ரல் 12, 2022 வரை இந்த தள்ளூபடி விற்பனை தொடரும். கூடுதல் சலுகையாக எஸ்பிஐயின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10% விழுக்காடு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை தினத்தில் Redmi 9i Sport, Redmi … Read more

‘டாடா நியு’ செயலி இயக்கத்தில் சிக்கலை எதிர்கொள்ளும் பயனர்கள்

டாடா நிறுவனத்தின் ‘டாடா நியு’ செயலியை பயன்படுத்தும் போது அதன் இயக்கத்தில் சில சிக்கல்களை எதிர்கொள்வதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். மளிகை முதல் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய, யுபிஐ மூலம் பணம் அனுப்ப என பல்வேறு தேவைகளுக்கு ஒரே அப்ளிகேஷனை பயன்படுத்தும் நோக்கில் டாடா நிறுவனம் டாடா நியு மொபைல் போன் அப்ளிகேஷனை அறிமுகம் செய்தது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஐஓஎஸ் பயனர்கள் இந்த செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இந்த செயலி குறித்து அறிந்த … Read more

பட்ஜெட் விலையில் அறிமுகச் சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது மோட்டோரோலாவின் மோட்டோ ஜி22. இந்த போன்.பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. மோட்டோ ஜி22 போன் ஜியோமி, ரியல்மி, இன்பினிக்ஸ் நிறுவனங்களின் பட்ஜெட் ரக போன்களுக்கு கடுமையான போட்டியாளராக இருக்கும் எனஹ் தெரிகிறது. வரும் 13-ஆம் தேதி ஆன்லைன் மூலம் இதன் விற்பனை ஆரம்பமாகிறது. இந்த போனுக்கு ஆயிரம் ரூபாய் அறிமுகச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சம் மற்றும் விலை: … Read more

ஆபத்தான ஆப்ஸ் – ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்!

உலகின் மிகப்பெரும் டெக் நிறுவனமான கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து ஆறு செயலிகளை நீக்கி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த செயலி மூலம் ஸ்மார்ட்போன்களில் வைரஸ் பரப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆப்ஸ் அனைத்திலும் SharkBot பேங்க் ஸ்டீலர் மால்வேர் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த மால்வேர் மக்களின் வங்கி தகவல்களை எளிதில் திருடுகிறது. நமக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்த தீம்பொருள் அடங்கிய செயலிகள் 15 ஆயிரத்துக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போது Google இந்த … Read more

பெண்களுக்கான ஸ்பெஷல் போன் – வெளியிட காத்திருக்கும் சியோமி

Xiaomi தற்போது அதன் புதிய ஸ்மார்ட்போனான Xiaomi CIVI S தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறது. CIVI S-இன் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi CIVI ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும். பெண்களை கவரும் வகையில் பிரத்யேக வடிவமைப்ப்பு, நிறங்களைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய பதிப்பு இந்தியாவில் வெளியாகவில்லை. தற்போது இதன் மேம்பட்ட பதிப்பு CIVI S அல்லது CIVI 2 என்ற பெயருடன் வெளியாகலாம் … Read more